திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரங்கம்: அபிராம்!

(அங்கே வந்து) அபி..  சாப்டுட்டு அப்புறமா தாத்தா கூட கொஞ்சம்  பேங்க் வரைக்கும் போயிட்டு வந்துரு..

News image
Updated On :5 அக்டோபர் 2019, 1:44 pm

க.சங்கர்

காட்சி : 1
இடம் : அபிராமின் வீடு / மொட்டை மாடி
நேரம் : காலை 8.45
மாந்தர் : அபிராம்,  அப்பா,  தாத்தா
(அபிராம் ஈரத்துண்டைக் காயப்போடுகிறான்.)

அப்பா : (அங்கே வந்து) அபி..  சாப்டுட்டு அப்புறமா தாத்தா கூட கொஞ்சம்  பேங்க் வரைக்கும் போயிட்டு வந்துரு..
அபிராம் : நானா?  இன்னிக்கா ?
அப்பா : நீதான்..  இன்னிக்குத்தான்..  லீவுதானே !
அபிராம் : என்ன விஷயம் ?
அப்பா : எஃப்.டி. முடியுது.  வட்டியை வாங்கிட்டு அசலை ரெண்டு வருஷத்துக்குப் போட்டுட்டு வரணும்..
அபிராம் : ப்பா..  அங்க கூட்டமா இருந்தா ரொம்ப நேரம் சும்மாவே வெயிட் பண்ணிட்டிருக்கணும்..  ரொம்ப கடுப்படிக்கும்..  அம்மாவ கூட்டிட்டுப்  போகச் சொல்லுங்க..
அப்பா : அம்மாக்கு ஏகப்பட்ட வேலை இருக்குடா..  நீயே பத்து மணிக்கு மேல கிளம்பு... பதினொன்னரைக்குள்ள வந்துர்லாம்.. .  வரும்போது வெளியே ஏதாவது சாப்ட்டுட்டு வாங்க.. 
அபிராம் : ப்பா..  ப்ளீஸ்..  என்னால முடியாது.. 
அப்பா : (படியிறங்கிக் கொண்டே)... ம்ம்ம்......  போயிட்டு வா!..... 
(அபிராமின் முகம் வாடுகிறது.)


காட்சி : 2
இடம் : வங்கி
நேரம் : காலை 10. 45
மாந்தர் : அபிராம்,  தாத்தா,  அதிகாரி
(அபிராம் அதிகாரியிடம்  வருகிறான்.) 

அபிராம் : சார்.. 
(அதிகாரி எழுதுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்க்கிறார்.)
அதிகாரி : யெஸ்.. ?
அபிராம் :  சார்..  ஃஎப்.டி. டைம் பீரியட் முடிஞ்சிருச்சு..  இண்ட்ரெட்ஸ்ட்ட வாங்கிட்டு திருப்பிப்போடணும்.. (கை காட்டி)  தாத்தா இங்க வந்திருக்கிறார்..   
அதிகாரி : (தாத்தாவைப் பார்த்துவிட்டு)  ம்ம்ம்.. பாஸ்புக் , பாண்ட் ரெண்ட்டையும் கொடுங்க..  வேலையிருக்கு.. ஒரு பிஃப்டீன் மினிட்ஸ் ஆகும்..
அபிராம் : (மகிழ்ச்சியுடன்)  ஓ.கே. சார்..
(அபிராம் தாத்தாவிடம் வருகிறான்.)

அபிராம் :  தாத்தா..  பாஸ்புக் பாண்ட் ரெண்டும் கொடுங்க..
தாத்தா : (திடுக்கிட்டு)  பாஸ்புக்கா ? புக் வேணுமா..? அது..  பீரோல இருக்கும்னு நினைக்கிறேன்..
(அபிராமின் முகம் மாறுகிறது.)

காட்சி : 3
இடம் : அபிராமின் வீடு
நேரம் : காலை 11. 10
மாந்தர் : அபிராம்,  அம்மா
(அபிராம் வேகமாகக் கதவைத் திறந்து உள்ளே வருகிறான்.) 

அம்மா : என்னடா..  வேலை முடிஞ்சுதா ?
அபிராம்  : ( கோபமாக)  ம்ம்ம்.. முடியும் ! பேங்க்குக்குப் போறப்போ பாஸ்புக் எடுத்துட்டுப் போகணும்னுகூட தெரியல..  இந்தத் தாத்தா ரொம்ப டார்ச்சர் பண்றார்.. 
(அபிராம் அறைக்குள் செல்கிறான்.)

அம்மா : ஏன், நீயும்தானே கூடப்போனே ? ஒரு வார்த்தை கேட்டு "பாஸ் புக்'கை ஞாபகப்படுத்தியிருக்கலாம்ல.. 
(அபிராம் பீரோவைத் திறந்து தேடும் சத்தம் கேட்கிறது.)

அபிராம் : ( குரல்) ம்மா..  பாஸ்புக்கை எங்க வெச்சிருக்கீங்க?  ச்சே.. இந்த வீட்ல எதாவது தேடாம எடுக்கிற மாதிரி இருக்கா ?
(அம்மா எழுந்து செல்கிறார்.) 

அம்மா : வர்றேன்..  இரு.. 
(அறை முழுவதும் துணிகள் இறைந்து கிடக்கின்றன......அம்மா புருவங்களைச் சுருக்கியபடி பாஸ்புக்கைத் தேடிக் கண்டுபிடித்து அபிராமிடம் கொடுக்கிறார்.)

காட்சி : 4
இடம் : வங்கி
நேரம் : காலை 11. 40
மாந்தர் : அபிராம்,  தாத்தா , அதிகாரி

(தாத்தா பதிவேட்டில் கையொப்பம் போடுகிறார்.)
அபிராம்  : தாத்தா..  "பாண்ட்'டுக்குப் பின்னால அவ்ளோ அழகா கையெழுத்துப் போட்டீங்க..  இப்ப ஏன் இப்படி?
அதிகாரி : வயசானவர்ல,  தம்பி.....  கொஞ்சம் கஷ்ட்டம்தான்.. 
அபிராம் : அவ்ளோதானே,  சார்? 
அதிகாரி : ம்ம்ம்..  (உரக்க) ஐயா, இந்தாங்க..  பாண்ட் மறுபடியும் ரெண்டு வருஷத்துக்குப் போட்டிருக்குது ...  வட்டிப்பணம் அக்கவுண்ட்ல போட்டாச்சு.. எப்ப வேணுமோ எடுத்துக்குங்க.. 
தாத்தா : இப்போ எடுத்துட்டுப் போலாங்களா,  சார்?
அதிகாரி : ம்ம்ம்.. டோக்கன் எடுத்துட்டு வெயிட் பண்ணி கவுண்ட்டர்ல வாங்கிக்கலாம்.. செக் லீஃப்  இல்லேன்னா சலான்  எழுதிக் கையெழுத்துப் போட்டுட்டு பணத்தை எடுத்துக்கோங்க..  (அபிராமிடம்) தம்பி,  பாஸ்புக் எடுத்துக்கப்பா..
தாத்தா : சரி,  வரங்க சார்.. 
அதிகாரி : போயிட்டு வாங்க, ஐயா..
  
காட்சி : 5
இடம் : வங்கி
நேரம் : காலை 12. 15
மாந்தர் : அபிராம்,  தாத்தா
(அபிராம், கவுண்ட்டர் ஒன்றிலிருந்து திரும்பி வருகிறான்.)

அபிராம் : ஸ்úஸா..  ஏன் தாத்தா இப்படியெல்லாம் பண்றீங்க..  வாங்க,  உங்கள கூப்புட்றாங்க.. 
(தாத்தா எழுந்து செல்கிறார்.)

கவுண்ட்டர் அதிகாரி : நீங்கதானா..?  ஏன்,  சலான்ல கையெழுத்து முன்னாடி ஒரு மாதிரியும் பின்னாடி ஒரு மாதிரியும் இருக்கு? 
தாத்தா : பதினொரு மணிக்கு நான் சாப்டுட்டு மாத்திரை சாப்பிடணும்.. அதான் கொஞ்சம் நடுக்கமாயிடுச்சு..  வேணும்னா உங்க கண்ணு முன்னாடியே சைன் போடறேன்..
(தாத்தா கையொப்பம் போடுகிறார்.)

கவுண்ட்டர் அதிகாரி : ஐயா,  எவ்ளொ பணம் எடுக்கறீங்க?
தாத்தா : இருபத்தி அஞ்சு.. 
(சலான் மீது சீல் குத்தப்படுகிறது.)

கவுண்ட்டர் அதிகாரி : (அபிராமிடம்)  பண விஷயம்லப்பா..   கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும்..  வெளிய அம்பது நோட்டு காட்டுதான்னு பார்த்துக்க...
(அபிராம் கவுண்ட்டர் வெளியே இருக்கும் எல்.இ.டி திரையைப் பார்க்கிறான்.....திரையில் 48.. 49.. 50 என தெரிகிறது.)

காட்சி : 6
இடம் : அபிராமின் வீடு
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
மாந்தர் : அபிராம்,  தாத்தா,  அம்மா

மணி 1. 05 : அபிராமும் தாத்தாவும் வீட்டுக்குள் நுழைகிறார்கள். 
மணி 1.15 : அபிராம் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிடுகிறான்.
மணி 1. 30 :  தாத்தா அம்மாவிடம் பேசுகிறார்.  அம்மாவின் முகம் மாறுகிறது.

காட்சி : 7
இடம் : அபிராமின் வீடு / முற்றம்
நேரம் : இரவு 9.10
மாந்தர் : அபிராம்,  அம்மா
(அபிராம் கைகழுவிவிட்டு உள்ளே வருகிறான்.)

அம்மா : சாப்பாடு நல்லாருந்துச்சா ?
அபிராம்  :  ம்ம்ம்.. ஓ.கே. ம்மா.. 
(அம்மா அவனை அமைதியாகப் பார்க்கிறார்.)
அபிராம் : என்ன ம்மா?
அம்மா : அபி எங்கிட்ட கோபமாவே பேசிக்கிட்டிருக்கான்..  பிரியமாவே பேசறதில்லனு தாத்தா சொல்றாருடா..  ஏன் அப்படி நடந்துக்கிற?
அபிராம் : (அலட்சியமாக)  அவருக்கு வேற வேலையே இல்ல..  எப்பப் பாரு.. இன்னிக்கு நீங்க  அவர்கூட நீங்க போய்ப் பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும்.. 
அம்மா : என்ன பண்ணாரு ?
அபிராம் : பாஸ்புக் எடுத்துட்டு வர்ல,  கையெழுத்து ஒழுங்கா போடல.. வர்றப்போ ஹோட்டலுக்குப் போனா என்ன ஆர்ட்டர் பண்றதுனே தெரியாம அத சொல்லலாமா இத சொல்லலாமானு என்னையே கேட்டுட்டிருக்காரு.. கோபம் வராம?
அம்மா :  ம்ம்ம்... சரி..  உன்னை எதுக்குக் கூடபோகச்  சொல்லறது.. இதெயெல்லாம் பார்த்துக் கோபப்படவா?
(அபிராம் அமைதியாக இருக்கிறான்.)
அம்மா : அபி,  நீ சின்ன வயசுல தாத்தாகிட்ட  எவ்ளோ சேட்டை பண்ணியிருக்கே ..  அதுக்கெல்லாம் அவர் ஒருதடவகூட மொகம் சுளிச்சதே கிடையாது..  இது இப்போ உன்னுடைய முறை..  நீ அவர்கிட்ட நல்லபடியா நடந்துக்கணும்..  கொற சொல்லிட்டேயிருக்கக்கூடாது..
(அபிராம் அமைதியாக இருக்கிறான்.)
அம்மா : வயசானவங்களுக்கு மூளையிலிருக்கிற செல்கள் குறைவாத்தான் இருக்கும்.. அதனால  சாதாரண செயல்பாடுகள்கூட சிரமமானதா இருக்கலாம்.. இயற்கைதான்.. அதுக்கெல்லாம் கோபப்படுறதா?
(அபிராம் சிறிது நேரம் அமைதியாக இருக்கிறான்.)
அபிராம் : புரியுது ம்மா..  இனிமேல் இதுமாதிரி விஷயங்கள்ல நான் சரியா நடந்துக்கிறேன் ..
(அம்மாவின் முகத்தில் புன்னகை தோன்றுகிறது.)

(திரை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.