பொன்மொழிகள்
By DIN | Published On : 29th October 2019 12:58 PM | Last Updated : 29th October 2019 12:58 PM | அ+அ அ- |

நேரத்தையும், பணத்தையும் திட்டமிட்டுச் செலவு செய்தால் உடம்பு ஓய்வுக்காக ஏங்காது.
- யாரோ
மன நிறைவே செல்வத்தை அழைக்கிறது ! ஆடம்பரமோ வறுமையைத் தேடுகிறது!
- இந்தியப் பழமொழி.
நன்றி கெட்டவனுக்கு நன்மை செய்வது கடலுக்குள் பன்னீர் தெளிப்பதைப் போன்றது!
- யாரோ
உழைக்கும் கரங்கள் வழிபடும் கரங்களைவிட வலிமை மிகுந்தவை!
- சரகஸ்திரர்
முயற்சி என்பது, வளர்ந்து தேயும் நிலவு அல்ல..... மேன்மேலும் வளர்வது!
- பிளிங்டன்
உயர்ந்த உள்ளங்களுக்கு இடையில்தான் தூய்மையான தோழமை மலர முடியும்!
- கிங்ஸ்லி
கடமையைச் செய்! புகழ் உன் காலடியில் கிடக்கும். செல்வாக்கு தானே தேடி வரும்!
- கைலர்
நம்பிக்கைதான் எதிர்காலத்தை உருவாக்கிக் கொணடிருக்கிறது!
- எட்மண்ட் பர்க்
ஒரு நல்ல நண்பனைப் பெறுவதற்கு ஒரே வழி நீயும் ஒரு நல்ல நண்பனாக இருப்பதுதான்!
- எமர்சன்
தொகுப்பு : சஜி பிரபு மாறச்சன்