பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நிவேதனம்!

ஸத்குரு ராமானந்தரின் ஆசிரமத்தில் ஒருநாள் காலை நேரத்தில் நாராயணருக்குப் பூஜை நடைபெற்றது. அதில் அர்ச்சனைகள் முடிந்த பிறகு ஒரு தட்டில் கொய்யாப் பழங்கள் நிவேதனம் செய்யப்பட்டன.

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 12:19 pm

சஜி பிரபு மாறச்சன்


ஸத்குரு ராமானந்தரின் ஆசிரமத்தில் ஒருநாள் காலை நேரத்தில் நாராயணருக்குப் பூஜை நடைபெற்றது. அதில் அர்ச்சனைகள் முடிந்த பிறகு ஒரு தட்டில் கொய்யாப் பழங்கள் நிவேதனம் செய்யப்பட்டன. பூஜையின் முடிவில் கொய்யாப் பழங்களை எடுத்து ஆசிரமத்தில் படிக்கும் சிறுவர்களுக்கு விநியோகம் செய்தார் ராமானந்தர். கொய்யாப் பழத்தைப் பெற்றுக்கொண்ட மாதவன் என்ற சிறுவன், குரு ராமானந்தரைப் பார்த்து,

""ஐயா,.... இந்தக் கொய்யாப்பழங்களை ஸ்வாமிக்கு எதுக்கு வைக்கிறோம்?'' என்று கேட்டான்.

""அதை ஸ்வாமி நாராயணர் சாப்பிடுவார்!.... அதுக்குத்தான்!'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார் ராமானந்தர்.

""அவர் இதைச் சாப்பிட்டா மாதிரியே தெரியலையே.... சுவாமி நாராயணர் இதைச் சாப்பிட்டிருந்தா பழங்கள் குறைஞ்சிருக்கணுமே!.... ஆனா அது மாதிரி எதுவும் நடக்கலையே?... நிஜமா இதை சாமி சாப்பிட்டதுன்னு எப்படிச் சொல்ல முடியும்?''

குரு மாதவனைப் பார்த்துப் புன்னகைத்தார். பிறகு தன் அருகில் இருந்த ஸ்லோக புத்தகத்தை எடுத்தார். பிறகு மாதவனைப் பார்த்து, ""நீ கேட்ட கேள்விக்கு நான் சாயங்காலம் பதில் சொல்கிறேன்.... அதற்குள் இந்த புத்தகத்தில் இந்த இரண்டு வரி ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து கொண்டு வா.... சாயங்காலம் இதை நீ எனக்கு ஒப்பிக்க வேண்டும்!'' என்று கூறி மாதவனிடம் கொடுத்தார் ராமானந்தர்.
மாதவன் கெட்டிக்காரச் சிறுவன். அவன் சிரத்தையுடன் படித்து அந்த ரெண்டு வரி ஸ்லோகத்தை மனனம் செய்து விட்டான். சாயங்காலம் ஆயிற்று. எல்லோரும் பிரார்த்தனைக்குக் கூடினர்.

புத்தகத்துடன் குருவிடம் சென்றான் மாதவன். புத்தகத்தை வாங்கிக்கொண்ட ராமானந்தர், ""ம்.... ஸ்லோகத்தைச் சொல்லு பார்க்கலாம்!'' என்று புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டார். மாதவனும் ஸ்லோகத்தைச் சொன்னான். சரியாகத்தான் சொன்னான்.

""இந்தப் புத்தகத்தைப் பார்த்துத்தானே படித்தாய்?''

""ஆமாம்!.... ஆனா நீ மனசுலே உள்வாங்கிண்ட மந்திரம் இன்னும் புத்தகத்திலேயே இருக்கே!.... உண்மையில் அதை நீ உள் வாங்கிக்கிட்டிருந்தா அது இந்தப் புத்தகத்திலேயிருந்து மறைஞ்சு போயிருக்கணுமே!'' என்றார் ராமானந்தர்.

மாதவன் குழப்பமாக குருவைப் பார்த்தான்.

""நீ மனதில் உள் வாங்கிய மந்திரம் சூட்சும நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல நிலையில் இருக்கிறது. இறைவன் சூட்சும நிலையில் இருப்பவன். சூட்சுமம் என்பது நாம் அவர் மீது கொண்டிருக்கும் அன்பும், பக்தியுமாகும்!...அவனுக்கு நாம் ஸ்தூல வடிவில் படைக்கும் நிவேதனங்களை அவன் சூட்சுமமாகவே ஏற்றுக்கொள்கிறான்!.... அதனால்தான் அதன்அளவு குறைவதில்லை!.... உதாரணத்திற்கு இப்போது நீ உள்வாங்கிய மந்திரம் உனக்குள் இருக்கிறது. ஆனால் புத்தகத்தில் இருக்கும் மந்திரம் குறையவில்லை அல்லவா?.... அதுபோலத்தான்!''

இதைக்கேட்ட சிஷ்யன் மாதவன் தெளிவடைந்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.