உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அறிவுக்குருவி!

அழுத குழந்தையைத் தூக்கியுமேஅம்மா அடுப்பறை சென்றளாம்கொழுகொழு பொம்மையாம் குழந்தைக்கே

Published On :

அழுத குழந்தையைத் தூக்கியுமே
அம்மா அடுப்பறை சென்றளாம்
கொழுகொழு பொம்மையாம் குழந்தைக்கே
குனிந்தே முத்தம் தந்தாராம்!

தட்டில் சோற்றைப் பிசைந்தேதான் 
தாயும் குழந்தைக்கு ஊட்டினளாம்
தட்டி விட்டே பாப்பாவும் 
சாப்பிட அடமே பிடித்ததுவாம்!

தட்டென ஏதோ சத்தம் வர 
தரையில் குழந்தையை இறக்கிவிட்டே 
பட்டென உள்ளே சென்றாராம் 
பார்த்ததன் பின்னே வந்தாராம்!

தட்டைச் சுற்றிலும் ஐந்தாறு 
தவிட்டுக் குருவிகள் இருந்தனவாம்!
கொட்டிய பருக்கை களை அவைகள் 
கொத்திக் கொத்தித் தின்றனவாம்!

பருக்கைகள் பாப்பா உடலெங்கும்!
மல்லிகைப் பூக்களாய் இருந்தனவாம்!
பருக்கைகள் எடுத்துக் குருவிக ளுக்கு 
பாப்பா வீசி மகிழ்ந்ததுவாம்!

குருவிகள் தின்ற பின் தாயும் 
குனிந்தே குழந்தையைத் தூக்கினளாம்!
""அறிவுக் குருவியே என் பாப்பா
அடடா!''  என்றே மகிழ்ந்தாராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.