அங்கிள் ஆன்டெனா
பறவைகள் எப்படி தங்கள் உடல் எடையோடு வயிற்றில் உள்ள முட்டைகளையும் சுமந்து கொண்டு பறக்கின்றன?
பதில்: பறவைகளின் வயிற்றில் முட்டை உருவானவுடன், அதன் வழக்கமான எடையை விட சற்றே கூடுதலாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த எடை அவ்வளவு அதிகமாக இருக்காது.
அநேகப் பறவைகளின் பேறுகாலம் 5 நிமிடங்களுக்குள்தான் இருக்கும். இதில் வான்கோழிக்கு மட்டுமே அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் பேறுகாலம் இருக்கும். அதாவது முட்டை உருவாகி, எல்லாப் பறவைகளின் வயிற்றிலும் அதிகபட்சமாக 24 மணி நேரத்துக்குத்தான் வயிற்றுக்குள் இருக்கும். இதனால் இந்த எடையைத் தூக்கிக் கொண்டு அவை பறப்பதற்கு அவசியமே இருக்காது.
இதனால் இந்த எடை அவற்றை மிகவும் பாதிப்ப தில்லை. முட்டையை ஏதாவது கூட்டில் இட்டவுடன் பறவையின் வயிறு காலியாகி மீண்டும் அது பழைய எடைக்குத் திரும்பி விடும்.
இதனால் 90 சதவீதப் பறவைகள் வயிற்றில் முட்டையுடன் பறப்பதில்லை என்பதுதான் உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

