இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பொன்மொழிகள்!

பெருந்தன்மை என்பது நற்குணங்களின் ஆபரணமாகும். 

News image
Updated On :26 டிசம்பர் 2020, 12:30 am

சஜி பிரபு மாறச்சன்

பெருந்தன்மை என்பது நற்குணங்களின் ஆபரணமாகும். 
- அரிஸ்டாட்டில்

நம் அறிவுத் திண்மையும், செயல்படும் திறனும் வளர்வது அன்பினாலேயே. 
- எமர்சன்

நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் செய்யப்பட்ட கலைவடிவங்களில் கூட  திறன்கள் மறைந்தே இருக்கும்.
 - ஓவிட்

இசையோ, சித்திரமோ, சிலையோ, வடிவமைப்போ எதுவாகிலும் சரி, கலை வடிவங்கள் ஆன்மிக அழகைப் புலப்படுத்துதே!  
-  சால்வடார்

ஒரு ஆன்மா, மற்றொரு ஆன்மாவுடன் உறவாடும் சங்கேத மொழியே கலையாகும்! 
- ஜான் ரஸ்கின்

பொருள் இருக்கும்வரை மண்ணுலகில் மதிப்பு. புண்ணியம் உள்ள அளவு விண்ணுலகத்தில் மதிப்பு. 
- பகவத் கீதை

நீங்கள் கடமையைச் செய்யும்போதே உங்கள் தகுதி தெரிந்துவிடும். 
- கதே

வீரனைவிட, கோழைதான் சச்சரவு நிறைந்தவனாக இருப்பான்.  
- ஜெஃபர்சன்

அன்பில்லாத மொழி வெறும் இரைச்சலே. 
- பைபிள்

மெழுகுவர்த்தி ஒளியைக் கொடுக்கிறது. நண்பர்களுக்கும்... பகைவர்களுக்கும்! 
- எட்னா செயின்ட் வின்சென்ட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.