எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முத்துக்கதை!: அணில் குட்டியின் பப்பாளி!

தோட்டத்தில் ஒரு பப்பாளி மரம். அந்த மரத்தில் இரண்டு பப்பாளிப் பழங்கள் நன்றாகப் பழுத்திருந்தது.

News image
Updated On :8 பிப்ரவரி 2020, 4:43 pm

சக்தி சிவன்


தோட்டத்தில் ஒரு பப்பாளி மரம். அந்த மரத்தில் இரண்டு பப்பாளிப் பழங்கள் நன்றாகப் பழுத்திருந்தது. அதில் வெகு வேகமாக அணில் "ஜிகில்' ஏறியது! மரத்தில் ஒரு பழுத்த பப்பாளிப் பழம் இருந்தது! ஜிகிலுக்குப் பப்பாளிப் பழம் என்றால் ரொம்பப் பிடிக்கும்! அது ஒரு பழத்தைக் கடித்துச் சுவைத்தது! பிறகு ஒரு பழத்தைப் பறித்துக் கொண்டு தன் குழந்தைகள் "ஜில்' லுக்கும், "க்ரீடா' வுக்கும் கொடுத்தது.

ஜில்லும், க்ரீடாவும் பழத்தைக் கடித்துச் சுவைத்துச் சாப்பிட்டன!

ஜில், அம்மா ஜிகிலிடம், ""அம்மா இதை யாரும்மா கொடுத்தது?'' என்று கேட்டது.
ஜிகில் சிரித்துக் கொண்டே, ""இதைக் கடவுள் கொடுத்தார்!'' என்றது.

""அம்மா, நான் கடவுளைப் பார்க்க வேண்டும்!.... அவரு எங்கேம்மா இருக்காரு?.... எனக்குக் காட்டுவியாம்மா!'' என்று கேட்டது ஜில்.

""ஓ!..... நீங்க இந்த பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுங்க..... அது விதைகள் இருக்கும்!.... அதை மண்ணில் புதையுங்க!.... கடவுள் வருவார்!''

கடவுளைப் பார்க்கும் சந்தோஷத்தில் ஜில்லும், க்ரீடாவும் வேகமாகச் சாப்பிட்டன! பிறகு அதிலுள்ள விதைகளையெல்லாம் தாங்கள் வசிக்கும் மரத்திற்கு அருகிலுள்ள மண்ணில் புதைத்தன.

இரண்டு நாட்கள் ஆயிற்று.

""அம்மா என்னம்மா இது?.... கடவுள் வரவே இல்லையே!'' என்றன ஜில்லும், க்ரீடாவும்.

""அவருக்கு நிறைய வேலை இருக்கு!..... மெதுவாத்தான் வருவாரு!....பொறுங்க'' என்றது ஜிகில்.

மேலும் ஓரிரு நாட்கள் கழிந்தன. விதைகள் துளிர் விட்டு மண்ணிலிருந்து வானைப் பார்த்த வண்ணம் இருந்தன.

ஜில் அதைக் கவனித்து விட்டது! அதற்கு ஒரே சந்தோஷம்! ""அம்மா! கடவுள் வந்து விட்டார்!'' என்று ஆனந்தமாய்த் துள்ளியது!!

""ஆமாம்! உனக்காகவே கடவுள் வந்திருக்கிறார்!'' என்றது ஜிகில்.

தினமும் நீரை ஊற்றிச் செடியை நன்றாகப் பார்த்துக் கொண்டது ஜில். நாட்கள் சென்றன. பப்பாளி மரம் காய்த்துப் பின் பழுத்தன!

""அம்மா! கடவுள் எனக்கு நிறைய்ய்ய்ய பப்பாளிப் பழங்களைக் கொடுத்திருக்காரு!''

ஜிகில் ஒரு பப்பாளிப் பழத்தைப் பறித்துக் கொண்டு வந்தது. அதை ஜில், க்ரீடா இரண்டும் பிளந்து சாப்பிட ஆரம்பிக்கும்போது பசியுடன் "ப்ரீத்' முயல் அங்கே வந்தது. ப்ரீத், ஜில்லுவுக்கும், க்ரீடாவுக்கும் ரொம்பசிநேகிதன்.

""எனக்கு ரொம்பப் பசிக்குதுடா!...'' என்றது ப்ரீத்.

""கவலைப் படாதே!... எங்கம்மா கிட்டே கேட்டு உனக்கு அந்த பப்பாளிப் பழத்தைப் பறிச்சுத் தரச் சொல்றேன்.... இங்கேயே உட்காரு!'' என்றது ஜில்.

ஜிகில் வேகமாக மரத்தில் ஏறி பப்பாளிப் பழத்தைப் பறித்துக்கொண்டு வந்தது. ஜிகில், ஜில், க்ரீடா, ப்ரீத் எல்லோரும் உட்கார்ந்து அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விளையாடின.

பழத்திலிருந்த விதைகளை ப்ரீத்திடம் கொடுத்து, ""இந்தா இதை வெச்சுக்கோ!.... இதிலே கடவுள் இருக்காரு.... இதை உன் வீட்டு முன்னாலே மண்ணுலே புதை! கடவுள் வருவாரு!'' என்றது ஜில். இப்படியே பல பழங்களின் விதைகளில் கடவுள் இருப்பதை அவை உணர்ந்தன. தங்கள் நண்பர்களுக்கெல்லாம் அந்த விதைகளை ஒன்றுக்கொன்று அளித்தன. நண்பர்கள் அனைவரும் அவற்றை மண்ணில் புதைத்துக் கடவுளின் வரவுக்காகக் காத்திருந்தன. விதைகளும் உடனே முளைத்தன. அந்த இடமே பழத்தோட்டமாகி விட்டது. அங்கு நுழைந்தவுடன் எல்லாருக்கும் அது கடவுளின் இருப்பிடமாகத்தான் தோன்றியது! அந்தத் தோட்டத்தில் அனைத்தும் சந்தோஷமாக இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.