அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஏக்கங்கள் மறைவதெப்போ?

வீட்டுக்குள்  முடக்கமின்றிவிளையாடச் செல்வதெப்போ?தொடுவதற்கே  அச்சமெனும்

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:53 pm

கண.முத்தையா

வீட்டுக்குள்  முடக்கமின்றி
விளையாடச் செல்வதெப்போ?
தொடுவதற்கே  அச்சமெனும்
நிலைமாறி  மகிழ்வதெப்போ?

இடைவெளிகள்  நம்மிடையே
விடைபெற்றுச்  செல்வதெப்போ?
தடையின்றி  கடைகளிலே
வாங்குதற்குச்  செல்வதெப்போ?

கொரோனா  அச்சமின்றி
கூட்டத்தில்  மகிழ்வதெப்போ?
நிறுத்திவைத்த வண்டியெலாம்
இயங்குகின்ற  நிலையுமெப்போ?

சுற்றுலாவில்  மனமகிழ்ந்து
சொக்குகின்ற  நாட்களெப்போ?
உறவினர்கள்  இல்லங்கள்
சென்றுவரும்  சூழலெப்போ?

ரயில் பயண உற்சாகம் 
மீண்டும் வருவதெப்போ?
தொலைக்காட்சி  தொலைபேசிச்
சிறை  மீண்டு வருவதெப்போ?

கடற்கரை,  பூங்காக்கள் 
காண நாம் செல்வதெப்போ?
சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி
கேட்டு ரசிப்பதெப்போ?

அன்னை தங்தையாரோடு 
கோயிலுக்குச் செல்வதெப்போ?
ஆலயத் திருவிழாத் 
தெப்பங்கள்  ரசிப்பதெப்போ?

விடுமுறைகள் நீண்டாச்சு
பள்ளிகளும் திறப்பதெப்போ?
இணைய வழிக் கல்விச் 
சலிப்பு மறைவதெப்போ? 

வகுப்புக்குச்  சென்று எங்கள் 
ஆசானைப் பார்ப்பதெப்போ?
வகுப்புத்தோழி யர், தோழரை 
மகிழ்ச்சியுடன்  பார்ப்பதெப்போ? 

விளையாட்டுத் திடலில் 
எங்கள் உற்சாக ஆட்டமெப்போ?
இதற்கெலாம் ஏங்கும் எங்கள்
ஏக்கங்கள்  மறைவதெப்போ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.