பொன்மொழிகள்

வருமானம் என்பது பலருக்கு தற்காலிகமானதாகத்தான் இருக்கிறது! ஆனால் செலவோ நித்தியமாக இருக்கிறது! 
பொன்மொழிகள்

வருமானம் என்பது பலருக்கு தற்காலிகமானதாகத்தான் இருக்கிறது! ஆனால் செலவோ நித்தியமாக இருக்கிறது! 
- பிராங்ளின்

வாழ்க்கையில் லட்சியம் இருந்தால்தான் வாழ்க்கையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தொடர்ந்து பெற
முடியும். 
- ஸ்டீவன்சன்

விவாதத்தின்போது மேற்கோள் காட்டுபவன் தனது நினைவுத் திறனைக் காட்டுகிறானே தவிர தனது அறிவைப் பயன் படுத்துவதில்லை. 
- கார்லைல்

பிறர் தவறுகளைக் கண்டு தன் தவறுகளைத் திருத்திக்கொள்பவனே அறிவாளி 
- ஹெர்பர்ட்

உயர்ந்த மனிதர்கள் அமைதி காப்பார்கள். ஆனால் நடத்தையிலும், செயலிலும் உறுதியாக இருப்பார்கள் 
- கன்பூசியஸ்

போரால் சாதித்தவைகளைவிட புன்சிரிப்பால் சாதித்துக் கொண்டவை ஏராளம்! 
- ஷேக்ஸ்பியர்

உலகில் அனைவருக்கும் சமமாகவும் இலவசமாகவும் கிடைக்கும் அபூர்வமான மூலதனம் "காலம்!' 
- விவேகானந்தர்

உயர்ந்த லட்சியத்தை அடைவதற்குத் தயாராயிருப்பவன், இடையில் ஏற்படும் இழப்புகளைத் தாங்கிக் கொள்வான்! 
- வால்டேர்

மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம்!..... ஆனால் அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது! 
- பெர்னார்ட் ஷா

கடவுளிடம் கேட்க வேண்டியதைக் கேட்போம்! அவர் தருவதைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருப்போம்! 
- நார்மன் வின்சென்ட் பீல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com