கேள்வி: வானவில்லில் ஏழு வண்ணங்கள் உள்ளன என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், இந்த ஏழு வண்ணங்களும் ஒரு வரிசையில் அதாவது முதலில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என்று அமைந்திருப்பதற்குக் காரணம் என்ன? இதில் ஏதாவது மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளதா?
பதில்: இதில் மாற்றம் ஏதும் நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. சூரியனின் ஒளிக் கதிர்கள் மழைத்துளிகளின் மீது பட்டுப் பிரதிபலிப்பதால் இந்த வர்ணஜாலம் நிகழ்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்த வர்ணஜாலத்திற்குப் பெயர் SPECTRUM. இந்த SPECTRUM ~ஒரு குறிப்பிட்ட அமைப்பில்தான் அமையும். அது என்றும் எப்படியும் மாறாது. இது இயற்கையின் அதிசயம். இது ஏன் இந்த வரிசையில் அமைகிறது என்பதைப் பலரும் கண்டுபிடிக்க முயன்று இயற்கைக்கு முன் தோற்றுப் போயிருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் வானவில் அதிசயம்தானே!
கூடுதலாக ஒரு உபரித் தகவல். வானவில்லின் வர்ணங்களின் வரிசையை எளிதில் மனதில் பதிய வைப்பதற்கு VIBGYOR என்று ஒரு சொல்லை உருவாக்கினார்கள். இதன்படி ஊதாவில் ஆரம்பித்து சிவப்பில் முடியும். ஆனால் வானவில் முதலில் சிவப்பில் ஆரம்பித்து ஊதாவில்தான் முடிகிறது. இதை ஞாபகம் வைத்துக் கொள்ள தஞவஎஆஐய என்ற சொல்லை பயன்படுத்தவதுதான் சரி என்கிறார்கள்.
அடுத்த முறை வானவில்லைப் பார்க்க நேரிடும்போது நன்றாகக் கவனியுங்கள். மேலே சிவப்பு, அதாவது முதலில் சிவப்பு நிறம் என்று ஆரம்பித்து இறுதியில் ஊதா என்று முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


