மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கருவூலம்:  மெகாவா!

அதெல்லாம் சரி. யார் இந்த மெகாவா?

News image
Updated On :7 நவம்பர் 2020, 12:30 am

சுமன்


பெயர் : மெகாவா
வயது : 8
சமீபத்திய சாதனை : 25 செப்டம்பர் 2020 அன்று வீரதீரச் செயல்களுக்கான இங்கிலாந்தின் விருது!

அதெல்லாம் சரி. யார் இந்த மெகாவா?
அதுவா?.... ஒரு எலி!...... ஆச்சரியமாக இருக்கிறதா?.... ஆமாம் ஒரு எலியேதான்!
சில நாடுகளுக்கு இடையை அவ்வப்போது நிகழும் யுத்தத்திற்குப் பிறகு அங்கே வீழ்ந்துள்ள பல வெடிகுண்டுகள் வெடிக்காமலேயே நிலத்தில் புதைந்து இருக்குமாம்! மக்கள் பாதுகாப்பின்றி அவற்றை மிதித்தாலோ, அவற்றின் மீது வண்டிகள் ஏறினாலோ அவை திடீரென வெடித்து உயிர்ச் சேதத்தை ஏற்படுத்துமாம்! இவ்வித இடையூறுகள் சுமார் 59 நாடுகளில் இருக்கின்றன. இதற்கு ஒரு தீர்வை எண்ணி பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த "அபோபோ' என்ற தன்னார்வ நிறுவனம் ஆப்பிரிக்க எலிகளுக்குப் பயிற்சி தந்து இந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து அழிக்கும் பணியைச் செய்கின்றதாம்!

மெகாவா எலி இதில் மிக சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது! சுமார் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவுள்ள நிலத்தை 30 நிமிடங்களில் மோப்ப சக்தியால் நுகர்ந்து வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து விடுகிறது!
மேலும் மெகாவா நிலத்தடியிலுள்ள கனிம வளங்களைக் கண்டுபிடிக்கவும் உதவுகிறது! இந்த எலி சற்றே பெரிதாக இருந்தாலும், எடை குறைவாக இருப்பதால் வெடிகுண்டுகளின் மீது ஏறினாலோ, அமர்ந்தாலே அவை வெடிப்பதில்லை என்று கூறுகின்றார்கள்.
இதுவரை 39 கனிம வளப் பகுதிகளையும் மெகாவா கண்டுபிடித்திருக்கிறது! மிக அபாயமான 29 குண்டுகளையும் அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாப்பாக அழிக்க உதவியிருக்கிறது!
மனித உயிர்களைக் காப்பாற்றும் மகத்தான சேவை செய்யும் இந்த "மெகாவா' எலியை இங்கிலாந்து அரசின் பி.டி.எஸ்.ஏ. என்ற அமைப்பு "பிரேவரி அவார்டை' இந்த எலிக்குத் தந்து கெüரவித்திருக்கிறது! சபாஷ்! மெகாவா!
இந்த இதழ் அட்டையில் தங்க மெடலுடன் மெகாவா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.