தீபாவளி!
பொற்கதிரோன் காலையிருள் பூட்டுடைக்கும் நேரம்!போட்டியிட்டு வேட்டொலிகள் வாழ்த்துரைகள் பாடும்!முற்றமெல்லாம் மாதரினம் நீட்டி வைக்கும் கோலம்!


பொற்கதிரோன் காலையிருள் பூட்டுடைக்கும் நேரம்!
போட்டியிட்டு வேட்டொலிகள் வாழ்த்துரைகள் பாடும்!
முற்றமெல்லாம் மாதரினம் நீட்டி வைக்கும் கோலம்!
முளைத்து வரும் ஆதவன் முன் நாட்டியங்கள் ஆடும்!
அப்பமுடன் அதிரசங்கள், வடைகள், பணியாரம்
ஆக்குகின்ற வாசனைகள் மூக்கில் வந்து மோதும்!
கொப்பளிக்கும் நுரையுடனே எண்ணெய் சிகைக் காயும்
குளித்துவிடும் குளிர்புனலும் கொல்லை வழி பாயும்!
தைத்த புது ஆடைகளும் மேனியரங் கேறும்!
ததும்புமொரு ஆனந்தமும் பாலருளம் தோறும்!
மைத்துனர்கள், மைத்துனிகள், மாமன், மாமியாரும்
மாப்பிள்ளைக்கு விழுந்தடித்துச் செய்வர் உபசாரம்!
உணட பலகாரங்கள் சீரணமா கிட வே
உருட்டிக் கையில் தந்திடுவார் தீபாவளி லேகியம்!
பூச்சிதறும் மத்தாப்பு, வெடிகளோ டுற்சாகம்!
புதுப்படங்கள் வெளியில் வந்து திரையரங்கில் ஓளிரும்!
பத்திரிகை அத்தனையும் சிறப்பிதழாய் மாறும்!
புதுக்கதைகள் கட்டுரைகள், கவிதை மலர் தூவும்!
நித்தம் இதேபோல் இனிமை நிலைக்க வேண்டுமென்று
நெஞ்சமெனும் வீதியிலோர் நினைவு ரதம் ஓடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...