எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அங்கிள் ஆன்டெனா

சாகச விமானிகள் தங்கள் விமானங்களைத் தலைகீழாகப் பறக்கச் செய்வது போல பறவைகளால் தலைகீழாகப் பறக்க முடியுமா?

News image
Updated On :10 அக்டோபர் 2020, 12:30 am


சாகச விமானிகள் தங்கள் விமானங்களைத் தலைகீழாகப் பறக்கச் செய்வது போல பறவைகளால் தலைகீழாகப் பறக்க முடியுமா?

பதில்: பறவைகள் வானில் பறப்பதைப் பார்த்துத்தான் மனிதன் பறப்பதற்கே பலவிதமான முயற்சிகளைச் செய்து பார்த்து கடைசியில் விமானத்தைக் கண்டுபிடித்தான். அதிலும் இப்போது அதிவேகமாக முன்னேறி செவ்வாய் கிரகம், புதன் கிரகம், சூரியன் என்று கூட ராக்கெட் அனுப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

பறவைகள் பறப்பதே  அழகுதான். அவை தலை கீழாகப் பறப்பதற்கு ஒருபோதும் முயற்சி செய்வதில்லை. அது அவற்றுக்கு இயலாத காரியமும்கூட. சில பறவைகள் வேகமாக டைவ் அடிப்பதைப் போலக் கீழே இறங்குவதை எல்லாருமே பார்த்திருப்போம்.

பறவைகளால் தலைகீழாகப் பறக்க முடியாது. இதற்குக் காரணம் அவற்றின் சிறகுகளின் அமைப்புதான். சிறகுகள் ஒன்றின் மீது ஒன்றாக சற்றுத் தள்ளி கூரையில் ஓடு அடுக்கியது போல ஓர் அடுக்காக அமைந்திருக்கும்.  இந்த அடுக்கின் கீழ் பகுதி வழியே காற்று உள்ளே போவதால் அவற்றின் உடல் மேலும் லேசாகி பறப்பதற்கான மெக்கானிசம் உண்டாகிறது.

பறவைகள் தலைகீழாகப் பறந்தால் என்ன ஆகும்? இந்த சிறகு அடுக்க அமைப்பு தலைகீழாகும்போது சிறகுகள்  அந்த ஒழுங்கான அடுக்கை இழந்து கன்னாபின்னாவென்று விலகி விடுவதால் இந்த மெக்கானிசம் ஒழுங்காக வேலை செய்ய இயலாமல் போய் விடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.