மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடி

""இது நான் பிறந்ததும் எழுதிய ஜாதகம்.''""ஆச்சரியமா இருக்கே!.... நீ பிறந்த உடனே ஜாதகமெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டியா?''

News image
Updated On :31 அக்டோபர் 2020, 12:30 am

""இது நான் பிறந்ததும் எழுதிய ஜாதகம்.''
""ஆச்சரியமா இருக்கே!.... நீ பிறந்த உடனே ஜாதகமெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டியா?''

- என்.பர்வதவர்த்தினி, 
பம்மல், சென்னை - 600075. 


""நான் டாக்டர் பட்டம் வெச்சிருக்கேன்!''
""அடேங்கப்பா!.... இந்த சின்ன  வயசிலேயேவா?''
""அதில்லே,..... ஒரு பட்டம் வாங்கி அதிலே டாக்டர் படம் வரைஞ்சிருக்கேன்!''

கே . இந்து குமரப்பன், 
விழுப்புரம் - 605602.

""பாட்டி,.... உனக்கு பட்டாணி பிடிக்குமா?''
""பல்லே இல்லை....பட்டாணி எப்படிடா பிடிக்கும் ?''
""அப்ப  இந்த பட்டாணிய பத்திரமா வெச்சுக்க.... விளையாடிட்டு வந்து 
வாங்கிக்கிறேன் பாட்டி !'' 

அசோக்ராஜா, 
 திருச்சி - 620015

""எங்க வீட்டுக்குள்ளே  நாலு ரூம் இருக்கு..... தோட்டத்திலே எழுபது ரூம் இருக்கு!''
""யம்மாடியோவ்!..... அப்படியா?''
""மஷ்ரூம்டா!...''

டீ.என்.பாலகிருஷ்ணன், 
சென்னை - 600091.

"".... உடம்பு "பெருக்கறது' கெடுதலாம்மா?''  
""ஆமாம்!....''
""பின்னே ஏன் என்னைப் பெருக்கச் சொல்றே?''

அசோக்ராஜா, 
திருச்சி- 620015.

""பாலில் இருந்து நமக்கு வேறு என்ன பொருளெல்லாம் கிடைக்கும்.... சொல்லுங்க!''
""காபி, டீ, பாதாம் பால், ஐஸ்க்ரீம், மில்க் ஷேக்.... சார்!''

ஆர்.மகாதேவன், 
திருநெல்வேலி டவுன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.