ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஒன்று சேர்தல்!

மரங்கள் சேர்ந்தால் காடாகும்!மனங்கள் சேர்ந்தால் நாடாகும்!கரங்கள் சேர்ந்தால் உறவாகும்!

News image
Updated On :18 செப்டம்பர் 2020, 5:26 pm

மரங்கள் சேர்ந்தால் காடாகும்!
மனங்கள் சேர்ந்தால் நாடாகும்!
கரங்கள் சேர்ந்தால் உறவாகும்!
கலைகள்  சேர்ந்தால் அழகாகும்!

நதிகள் சேர்தல் நலமாகும்!
நாட்டில் உழவு உயர்வாகும்!
மதியோர் சேர்ந்தால் "அவை' யாகும்!
மலர்கள் சேர்ந்தால் மணம் வீசும்!

முகில்கள் சேர்ந்தால் மழையாகும்
மொழிகள் சேர்ந்தால் அறிவாகும்!
பகிர்தல் சேர்ந்தால் பசியாறும்!
பாசம் சேர்ந்தால் பண்பாகும்!

இயலும் இசையும் சேர்ந்திட்டால் 
இனிய தமிழின் சுவை கூடும்!
முயற்சி, உழைப்பு சேர்ந்திட்டால் 
முதிர்ந்த வெற்றி வாழ்வாகும்!
கே.பி.பத்மநாபன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.