பொன்மொழிகள்!

ஒருவன் தன் வாழ்வின் முற்பாதியில் கற்றுக் கொண்ட பழக்கங்கள்தான் அடுத்த பிற்பாதியில் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.
பொன்மொழிகள்!
Published on
Updated on
1 min read


ஒருவன் தன் வாழ்வின் முற்பாதியில் கற்றுக் கொண்ட பழக்கங்கள்தான் அடுத்த பிற்பாதியில் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.
- தாஸ்தோவஸ்கி

மனம் ஒழுங்காக, நன்றாக இருந்தால் நல்ல எண்ணங்கள் தாமாகவே தோன்றும். 
- காஸ்பான்

செய்யும் வேலையில் விருப்பமில்லாமல் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்பவன் பணத்தையும் சம்பாதிப்பதில்லை.... வாழ்க்கையில் இன்பத்தையும் பெறுவதில்லை. 
- சாமுவேல் உல்மேன்

துயரம் தலையை நரைக்கச் செய்யும். அதே சமயம் இதயத்தை வலிமையாக்கும். 
- ஜார்ஜ் பெய்ஷி

மனிதர்களை வசப்படுத்த வழி அவர்களைக் குறை சொல்வதன்று....... மாறாக அவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வதே. 
- ரான்னிங்

ஒரு முள் குத்திய அனுபவம்கூட காடளவு எச்சரிக்கைக்குச் சமம்! 
- லின்டால் டேவர்

ஒழுக்கம் அனைத்தையும் பெற்றுத் தரும். வாழ்வையும் பாதுகாக்கும். 
- காந்தி

மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் உள்ளது. மற்றவர்கள் வீட்டில் அதைத் தேடவேண்டியதில்லை. 
- டக்ளஸ் ஜெரால்டு

ஒரு பக்கம் சத்தியமும், ஒரு பக்கம் அன்பும் கொண்ட காசுதான் உலகில் எங்கும் எக்காலத்திலும் செல்லும் காசு! 
- காந்தி

நான் என்ன செய்ய வேண்டும் என்பதுவே என் கவலை. என்னைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது அன்று! 
- எமர்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com