தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அங்கிள் ஆன்டெனா

அவ்வளவு பெரிய யானை எப்படி அளவில் சிறிய மனிதனுக்குக் கீழ்ப்படிகிறது?

News image
Updated On :26 செப்டம்பர் 2020, 12:30 am

DIN

அவ்வளவு பெரிய யானை எப்படி அளவில் சிறிய மனிதனுக்குக் கீழ்ப்படிகிறது?

பதில்: பெரிய யானையை உடனடியாகப் பழக்கிவிட முடியாது. ஆனால், காட்டிலிருந்து குட்டி யானையைக் கொண்டு வந்து அதற்குப் பலர் உணவளித்துப் பாதுகாப்பார்கள்.

இப்படி ஆறு மாதங்கள் செல்லும். இந்தக் காலக் கட்டத்தில் குட்டி யானை கொஞ்சம் கொஞ்சமாகத் தனது தாயை மறக்க ஆரம்பிக்கும்.
ஆறு மாதங்களில் அதன் குழந்தைத்தன்மை மாறிவிடும். வளர்கிறது அல்லவா? அதன் எதிர்த்துப் போராடும் ஆற்றலையும் அது இழக்க ஆரம்பிக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியாளர்களிடமிருந்து தப்ப முயற்சிப்பதை நிறுத்தும்.

திடீரென்று ஒருநாள் அதுவரை சந்திக்காத புதுமனிதர் ஒருவர் அந்தக் குட்டியின் முன்னால் நிறுத்தப்படுவார்.
அவர் அதை அன்புடன் தொட்டு, கட்டிக்கொள்வார். கட்டிப் போடப்பட்டிருக்கும் அதன் கட்டுகளை அவர் அவிழ்த்துவிடுவார்.
முதன் முதலாக இந்த உலகில் தன்னையும் மதிக்கும் இன்னொரு உயிரை இப்போது அந்தக் குட்டி பார்க்கிறது. அவரை நம்ப ஆரம்பிக்கும். அவர்தான் பாகன் என்று அறியாமலேயே அவரை நேசிக்க ஆரம்பிக்கும்.
ஒரு மாபெரும் விலங்கொன்றின்மீது தனது கட்டுப் பாட்டை ஒரு மனிதன் இப்படித்தான் பெறுகிறான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.