""நேற்று நடந்த கிரிக்கெட் ஆட்டத்தில் நம்ம ஊரு அணி ஏன் தோத்துப்போச்சு?''
""வெரி சிம்பிள்!....எதிர் அணி ஜெயிச்சுடுச்சு!''
ப.செல்வன்,
லசரவாக்கம், சென்னை - 600087.
""இசைக்கருவிகளில் எது ரொம்ப விலை அதிகம் தெரியுமா?''
""நீயே சொல்லு...''
""மிரு"தங்கம்' தான்!''
கே.இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.
""ஓட்டப்பந்தயத்திலே கலந்துகிட்டியே, பரிசு கிடைச்சுதா?''
""ஒ!...கிடைச்சுதே''
""உனக்கா?''
""இல்லே..... ஜெயிச்சவங்களுக்கு!''
மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.
""பாலு, கிரவுண்டுக்குக் கிழக்கே கோல் போஸ்ட் இருக்கா, தெற்கே பாட்மிண்டன் கோர்ட் இருக்கா, மேற்கே கோல் போஸ்ட் இருக்கா, வடக்கே பாஸ்கெட்பால் கோர்ட் இருக்கா, நான் ஓடினேனா,''
""சுத்தி வளைச்சுப் பேசாதே..... விஷயத்துக்கு வா!''
""நீ இரவல் தந்த பேனா எங்கேயோ விழுந்திடுச்சு!''
ஆர்.யோகமித்ரா,
செம்பாக்கம், சென்னை - 600073.
""ஏண்டா சோப்பை தூரமா தூக்கிப் போட்டுட்டு குளிக்கிறே?''
""நீங்கதானே சோப்பு போட்டு குளின்னு சொன்னீங்க?''
பி.சி.ரகு,
விழுப்புரம்.
""மூணு நாளா எங்கம்மா மோர்க்குழம்பே செய்யறாங்கடா!..... போரடிக்குது!''
""அப்போ "போர்க்குழம்பு' ன்னு சொல்லு!''
ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம்,
திருநெல்வேலி டவுன்- 627006.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி: சு. வெங்கடேசன் எம்.பி.
மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்!

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவது கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசினாரா ஸ்டாலின்? மீஞ்சூர் சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவது கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


