""ஸ்கூல் திறந்தவுடனே விதவிதமா கலர் கலரா மாஸ்க் போட்டு அசத்துவோம்டா!''
""நிறுத்துடா!....யூனிஃபார்ம் மாஸ்க்தான் மாட்டச் சொல்லுவாங்க பாரு!''
ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம்,
திருநெல்வேலி டவுன்.
""நினைக்கிறதெல்லாம் நடந்தா?''
""ட்ராஃபிக் ஜாம் ஆகும்!''
ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம் - 608001.
(இரண்டு காகங்கள் பேசிக்கொள்கின்றன)
""என் பையனுக்கு ரெண்டு நாளா ஜுரம்!''
""..."க்ரோசின்' கொடுத்துப் பாரேன்!''
டீ . என் . பாலகிருஷ்ணன், 5/501, சத்சங்கம் தெரு, 33, ராகப்ரியா ஃப்ளாட்ஸ்,
மடிப்பாக்கம்,
சென்னை - 600091.
""என்ன பண்றே?''
""...."நீ குழாய்' பார்த்துக்கிட்டிருக்கேன்!''
""அப்படீன்னா?''
""யூ ட்யூப் பார்த்துக்கிட்டிருக்கேன்!''
உ.சபாநாயகம்,
சிதம்பரம்.
""உன்னை எத்தனை தடவை கூப்பிடறது?.... காது கேக்கலையா?''
""கேக்குதே!.... பத்து தடவை
கூப்பிட்டீங்க!..... சரியா?''
ஆர் . மகாதேவன்,
திருநெல்வேலி டவுன்
""பக்கத்துக் கடையிலே போய் சுகர் வாங்கிக்கிட்டு வா''
""உன்னோட சைக்கிளைக் குடு!''
""பக்கத்துக் கடைதானே.... நடந்துபோய் வாங்கிட்டு வா''
""நடந்தா சுகர் குறையும்னு நம்ம டாக்டர் சொன்னாரே!''
கே.இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


