சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கெட்டிக்காரனைக் குறிக்கும் சொல் ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. உயிர் போகும் அளவுக்கு அபாயத்தில் இருந்து மீண்டவருக்குக் கிடைப்பது...
2. நமது வீடுகளைக் கட்டிக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்...
3. மகன், பிள்ளை என்பதற்கு மற்றொரு சொல்...
4. சீத்தலையை எடுத்து விட்டால் கிடைப்பவர்...
5. தொல்லை தரும் எலிகளைப் பிடிக்க உதவும் கருவி...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. புதுவாழ்வு,
2. கொத்தனார்,
3. புத்திரன்,
4. சாத்தனார்,
5. எலிப்பொறி.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : புத்திசாலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...