""உங்கப்பா ஏன் மாடிப்படியிலே உட்கார்ந்து காபி குடிக்கிறாரு?''
""காபி குடிக்கிறதை படிப்படியா நிறுத்தப்போறாராம்!''
கு.வைரச்சந்ததிரன், திருச்சி .
""என்னடா இது?.... உன் பனியன் இவ்வளவு நீளமா இருக்கு?''
""இது நீண்டு உழைக்கும்னு கடைக்காரர் சொன்னாரு..... நான்தான் சரியா புரிஞ்சுக்கலே!''
கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம், 605602
""நான் மேலே படிக்கலாம்னு இருக்கேன்!''
""அப்போ ஜூன், ஜூலையிலேயெல்லாம் படிக்கவே மாட்டியா?''
சி.ஆர்.ஹரிஹரன்,
அலுவா - 683108
""ஆரஞ்சு எவ்வளவு அங்கிள்?''
""முப்பது!''
க.ஜெயராம்,
திண்டிவனம் - 604001
""ஸ்ஸ்ஸ்ஹா!.... ஸ்ஸ்ஸ்ஹா!''
""என்னடா எதாவது ரொம்ப காரமா சாப்பிட்டியா?''
""இல்லே எங்கப்பா எனக்கு உரைக்கிறா மாதிரி புத்தி சொன்னாரு!''
ஆர் . சுப்பு,
திருத்தங்கல் - 626130
""மழை எப்படிப் பெய்யுது? சொல்லு பார்க்கலாம்!''
""தண்ணியாதான்!''
சி.ஆர்.ஹரிஹரன்,
அலுவா - 683108
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


