விண்வெளியில் சீனாவின் ஒரு முக்கியப் பயணம்!

சில வருடங்களுக்கு முன் விண்வெளி ஆராய்ச்சிகளை விண்வெளியிலிருந்தே கண்காணித்துச் செயல்படும் வகையில் விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டது!
விண்வெளியில் சீனாவின் ஒரு முக்கியப் பயணம்!


சில வருடங்களுக்கு முன் விண்வெளி ஆராய்ச்சிகளை விண்வெளியிலிருந்தே கண்காணித்துச் செயல்படும் வகையில் விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டது! அதில் அமெரிக்கா உள்பட பல் வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விண்கலத்திலேயே தங்கி ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். 
ஆனால் சீன ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி செய்யத் தடை விதிக்கப்பட்டது. அதனை வெல்லும் வகையில் சீனா தனது நாட்டிற்கென ஒரு சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க நினைத்தது. அதன் விளைவாக 29 - ஆம் தேதி, பீஜிங் ஷென்ùஸள ஏவுதளத்திலிருந்து ஒரு விண்வெளி நிலையத்தை வானில் ஏவியது. அதற்கு "டியாங்காங் - 3-' என்று பெயரிட்டது! (டியாங்காங் என்றால் சுவர்க்கப் பிரதேசம் என்று பொருள்) பூமியிலிருந்து 350 கி.மீ மற்றும் 450 கி.மீ. சுற்றுப் பாதையில் இந்த விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த விண்வெளிநிலையத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. ஆனால், நை ஹைஷெங், லியூ போமிங், டாங் ஹாங்போ என்ற மூன்று விண்வெளி வீரர்களை இம்மாதம் 17 - ஆம் தேதியன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிவிட்டது சைனா! தற்போது சீனாவின் இந்த சாதனையை விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள  பல்வேறு நாடுகள் பாராட்டியுள்ளன. மேலும் ஆராய்ச்சிகளில் ஒருவருக்கு ஒருவர் உதவுவதாகவும் கூறியுள்ளன. சீனாவும் அதை ஏற்றுக்கொண்டு, ஆராய்ச்சிகளில் பங்கேற்கவும், பங்களிக்கவும் இசைந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com