ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

யானையின் தும்பிக்கை!

யானையின் தும்பிக்கை சுமார் 200 கிலோ எடையுள்ளது! வேகமாக யானை மூச்சை உள்ளிழுக்கும்போது சுமார் 540 கி.மீ வேகத்தில் இழுக்க முடியுமாம்! இது மனிதனின் மூச்சு உள்ளிழுப்பைப் போல் 30 மடங்காகும்! 

News image
Updated On :26 ஜூன் 2021, 12:30 am

யானையின் தும்பிக்கை சுமார் 200 கிலோ எடையுள்ளது! வேகமாக யானை மூச்சை உள்ளிழுக்கும்போது சுமார் 540 கி.மீ வேகத்தில் இழுக்க முடியுமாம்! இது மனிதனின் மூச்சு உள்ளிழுப்பைப் போல் 30 மடங்காகும்! 

யானைகள் தும்பிக்கையால், மூச்சு விடுகிறது. வாசனைகளை நுகர்கிறது. சத்தத்தையும் ஏற்படுத்துகிறது. எடுத்த உணவை வாய்க்குள் ஊட்டிக் கொள்கிறது. சுமார் 180 கிலோ எடையுள்ள உணவை அது இழுக்க முடியும்! 

யானை தன் தும்பிக்கையால் சுமார் ஒண்ணரை வினாடிக்குள் ஐந்தரை லிட்டர் தண்ணீரை உறிஞ்சிவிடும்! உறிஞ்சும்போது அதன் தசைகளை மேலும் விரிவடையச் செய்து, மேலும்  சுமார் 64% நீரை அதிகமாக இழுக்கும்! பின்பு தண்ணீரை வெகு வேகமாக ஷவர்போல் பீய்ச்சி அடிக்கும்! தண்ணீரைக் கண்டால் சந்தோஷமாக இந்த மாதிரி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விளையாடும். 

யானை தன் தும்பிக்கையால் உணவை நேராக வயிற்றினுள் செலுத்திக்கொள்ள முடியாது. தும்பிக்கை என்பது ஒரு நீண்ட மூக்கு! அவ்வளவே! உறிஞ்சிய நீரை வாய்க்குள் செலுத்தி தாகத்தை தீர்த்துக் கொள்ளும். மெல்லிய இலை, காகிதம் போன்றவற்றையும் தும்பிக்கையால் உறிஞ்சி லாவகமாக எடுத்துவிடும். தன் தும்பிக்கையால் சுமார் 350 கிலோ எடையை அனாயாசமாகத் தூக்கும்! 

ஆப்பிரிக்க யானைகளுக்கு தும்பிக்கையின் முனையில் விரல் போன்ற அமைப்பு இருக்கும். எனவே சிறிய நாணயத்தைக்கூட எடுத்துவிடும்! ஆசிய மற்றும் இந்திய யானைகளுக்கு ஒரு விரல் போன்ற அமைப்பே இருக்கும்! தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள்  யானையின் தும்பிக்கைத் திறன்களை ரோபோக்களில் பயன்படுத்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.