திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடி

""டேய், எ, பி. சி, டி, தலைகீழா சொல்லச் சொன்னேன்..... அதுக்குன்னு இப்படியா?''

News image
Updated On :26 ஜூன் 2021, 12:30 am

""டேய், எ, பி. சி, டி, தலைகீழா சொல்லச் சொன்னேன்..... அதுக்குன்னு இப்படியா?''

கே. இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.

""வா சாப்பிடப் போலாம்!....''
""இடம் இல்லே!''
""பந்தியிலா இடமில்லே?''
""இல்லே என் தொந்தியிலே!''

வி . ரேவதி,
தஞ்சாவூர்.

""வரிசையிலே கடைசியிலே போய்  நிக்கச் சொன்னேனே.... ஏன் போகலே?''
""ஏற்கனெவே யாரோ ஒரு பையன் அங்கே நின்னுக்கிட்டிருக்கானே சார்!''

உமர்
கடையநல்லூர் - 627751.

""என்ன மாலா மவுனமா இருக்கே?''
""இல்லையே, மெளன ராகம்  பாடிக்கிட்டிருந்தேன்!''

பி.சி.ரகு,
விழுப்புரம்.

""சூரியனைச் சுற்றும் கோள்கள் பெயரைச் சொல்லு பார்க்கலாம்னு கேட்டா பேசாம இருக்கியே?.... என்ன ஆச்சு உனக்கு?''
""கோள் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்களே சார்!''

அ . ப . ஜெயபால், 
சிதம்பரம் - 608001.


 ""சாயங்காலம் மொட்டை மாடியிலேயிருந்து வர்றப்ப அம்மா மூணு வாயில் புடவை வெச்சிருந்தாங்க!''
""கர்சீப்னா பரவாயில்லே..... நம்பலாம்!.....  மூணு புடவையை வாயில் வெச்சிருந்தாங்களா?.... நம்பவே முடியலையே!''

மாலாராம், 
அஞ்சல், வடகுத்து - 607308.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.