

எத்தனை எத்தனை வண்ணங்கள்
எப்படி அழகாய் இருக்கிறது?
மொத்த அழகும் சேர்த்து வைத்த
முழுமை அழகு மயிலுக்கு!
மேகம் கண்டால் வண்ணமயில்
மெல்லிய தோகை விரித்தாடும்!
மோதும் மேக இடி முழக்கம்
கேட்டால் அஞ்சித் தான் அகவும்!
தோகை முழுதும் கண்கள்போல்
தோன்றி ஒளிரும் செறிவழகு!
ஆகா! தேசப் பறவையிந்த
அழகிய மயிலுக்கு ஈடேது?
தோட்டம் விட்டுத் தோட்டமென
துள்ளி ஓடி மரக்கிளையில்
நாடி அமரும் மயிலினையே
பாடிப் போற்றி மகிழ்ந்திடுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.