உலக இயக்கம் உழைப்பவரால்தான்!
வீதியை நித்தம் சுத்தம் செய்வோர்வீட்டைப் பெருக்கித் துடைத்து விடுவோர்! -சுவைஉணவைச் சமைத்துப் பறிமாரிடுவோர்!


வீதியை நித்தம் சுத்தம் செய்வோர்
வீட்டைப் பெருக்கித் துடைத்து விடுவோர்! -சுவை
உணவைச் சமைத்துப் பறிமாரிடுவோர்!
அழகாய்த் துணிகள் தைத்துக் கொடுப்போர்
அழுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுப்போர்
காய்கள், பழங்கள், கீரை விற்போர்
ஊசி முதல் பல கருவிகள் செய்வோர்
உடல் நலம் காத்திட உதவிகள் செய்வோர்!
அலுவலகத்தில் கணக்குகள் பார்ப்போர்!
அறிவை வளர்க்கும் ஆசிரியர்கள்!
சத்திரம், முதலா வீடுகள் தோறும்
பாத்திரம் துலக்கிப் பளிச்சென வைப்போர்!
மாட்டைக் கறந்து பாலை நிரப்பி
வீடுகள்தோறும் விரைந்து அளிப்போர்!
காலை செய்தித் தாளைத் தருவோர்!
ஊர்திகள், இயந்தி ரங்கள் செய்வோர்
மற்றும் அதனைப் பழுதும் பார்ப்போர்!
நிலத்தை உழுது, விளைச்சல் தருவோர்!
பயணம் மற்றும் சரக்குகள் சேர்க்க
ஊர்திகள் ஓட்டி உதவிகள் செய்வோர்!
உலக இயக்கம் உழைப்பவரால்தான்!
உழைக்கும் மக்களைப் வாழ்த்த ஓரு நாள்!
மேதினியில் நாம் கொண்டாடும் நாள்
மே முதல் நாளே அந் நாளாகும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...