மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடி

""ரப்பர் பாம்பை ஏண்டா ஆற்றில விடுறே''""தண்ணி பாம்பை பயமுறுத்தறேன்.'''

News image
Updated On :22 மே 2021, 2:54 pm

""ரப்பர் பாம்பை ஏண்டா ஆற்றில விடுறே''
""தண்ணி பாம்பை பயமுறுத்தறேன்.'''

- என். பர்வதவர்த்தினி, 
சென்னை 75

""பாட்டி ஒரு கதை சொல்லேன்!''
""என்னோட ஃபேஸ் புக்கிலே அப்டேட் பண்ணியிருக்கேன்!.... படிச்சுட்டு லைக் போடுடா பேராண்டி!''

பி.பாலாஜி கணேஷ், 
சிதம்பரம்.

""ஓட்டப் பந்தயம் ஓட வந்த முயலிடம் என்ன எழுதி வாங்கறாங்க?''
"" நடு வழியில் தூங்கக்கூடாதுன்னு உறுதி மொழிப் பத்திரம்  வங்கறாங்க..''         

- ஏ. நாகராஜன், 
பம்மல்

""நான்  எழுதின ஜோக் மதல்முதலா பத்திரிகையிலே வந்திருக்குடா!...''
""ஓ!.... இதுதான் ஆ"ரம்பமா'...!''

ஆர்.சுப்பு
திருத்தங்கல் - 626130.

""தைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம்?''
""தை மாசம் சூரியனுக்கு நாம பொங்கல் வைப்போம்...சித்திரை மாசம் சூரியன் நம்மள பொங்க வைக்கும்!''

எஸ்.பிரபுராஜா,
மதுரை.

""நான் நூடுல்ஸ், பிரைடு ரைஸ், பொங்கல், கிச்சடி எல்லாம் பண்ணுவேன்!.... 
நீ என்ன பண்ணுவே?''
""அதெல்லாம் போட்டால் தட்டை காலி பண்ணுவேன்!''

எஸ்.பி.விஜயராஜகோபாலன், 
சென்னை - 600090

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.