குழந்தைகளே நலமா,
நான் தான் அவகோடா மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் பெர்சியா அமெரிக்கானா என்பதாகும். நான் லவ்ராசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு வெண்ணை பழ மரம், ஆனைக் கொய்யா, முதலைபேரி, பால்டா என்ற வேறு பெயர்களும் உண்டு. என் பழத்தின் வெளிப்புறத் தோல் முதலையின் தோலினை ஒத்திருப்பதால் என்னை முதலைபேரின்னும், சதைப் பகுதியானது வெண்ணை போன்று வழுவழுப்பாக இருப்பதால் என்னை வெண்ணை பழம் மரம் என்றும் அழைக்கிறாங்க. என் தாயகம் மெக்சிகோ. நான் வறட்சியைத் தாங்கி வளருவேன். நம் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளிலும், காமனூர் கிராமத்திலும் அதிகமாக காணப்படறேன்.
குழந்தைகளே, என் பழமானது உருண்டையாகவோ அல்லது பேரிக்காய் வடிவிலோ இருக்கும். என் பழத்தால் நான் பல பெருமைகளைப் பெற்றுள்ளேன். சொல்றேன், கேளுங்க.
என் பழத்தில் எண்ணிலடங்கா வைட்டமின்களும், தாது உப்புகளும், அளவில்லா சத்துகளும் உள்ளன. குழந்தைகளே, என் பழத்திலிருக்கும் வைட்டமின் கே, இரத்தம் உறைதலுக்குத் உறுதுணையாக இருந்து, தாய் மற்றும் சேய் நலன் காக்கும் என்று மருத்துவர்கள் சொல்றாங்க. கர்ப்பிணிகளுக்கு என் பழம் அருமருந்து. அதாவது, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் வாந்தியை என் பழம் கட்டுப்படுத்தும். இதில் ஃபோலிக் அமிலம் இருக்கு. இது குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது. என் பழத்தின் கரோடினாய்டுகள் சூரிய கதிர்வீச்சிலிருந்து வெளியாகும் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும். அது மட்டுமா, விண்ளாட்டு வீரர்களுக்குத் தேவையான சக்தியையும், எலும்புகளைப் பலப்படுத்தி ஆரோக்கியத்தையும் அது கொடுக்கும்.
வெளிநாட்டினர் என் பழத்திலிருந்து பல வகையான பானங்களை செய்து குடிக்கிறாங்க. நட்சத்திர ஓட்டல்களில் சப்பாத்தி மென்மையாக இருக்க வெண்ணைக்குப் பதிலா என் பழத்தைத் தான் பயன்படுத்தறாங்க.
என் பழம் உயிர்க்கொல்லி நோய்களுக்கு சிறந்த மருந்து. இதிலிருக்கும் நிறைந்திருக்கும் காராடினாய்டுகள், நிறைவுறாக் கொழுப்புகள் புற்றுநோய்க்கு எதிரியாகும்.
எப்படின்னா, இதிலிருக்கும் குளுதாதயோன் என்ற ஆன்டிஆக்ஸிஜென்ட் வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் ப்ரீரேடிக்கல்களிலிருந்து செல்களைக் காப்பதோடு புற்றுநோயை அண்ட விடாமல் தடுக்கிறது. குழந்தைகளே, என் பழம் செரிமானப் பிரச்சினைகளையும், மலச்சிக்கலையும் ஓட ஓட விரட்டிடும். ஏன்னா, அதில் பழத்தில் கரையக் கூடிய, கரையாத நார்ச்சத்துகள் நிரம்ப உள்ளன. இவை உணவினை நன்கு செரிக்க செய்து, நச்சுப்பொருள்களை கழிவாக வெளியேற்றுகின்றன. உங்களது அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவீதத்தை நான் பூர்த்திச் செய்வேன்.
என் பழம் வாய் துர்நாற்றதைப் போக்கும். இதில் இருக்கும் பிளவனாய்டுகள் மற்றும் பாக்டீரிய எதிர்ப்புக் பொருள்கள் வாயில் கிருமிகளின் வளர்ச்சியைத் தடை செய்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கி உங்களை சுவாசப் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
உங்கள் கண்கள் பாதுகாப்பிற்கும் என் பழம் பெரும் பங்கு வகிக்கிறது. எப்படின்னா இதிலிருக்கும் பைட்டோ நியூட்ரியானான லுடீன் சீக்சாத்தைன் கண் புரை நோய், கண் அழற்சி நோய், முதியவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளையும் நீக்கும். என் பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இதயம் சம்பந்தமான நோய்களும், வாத நோய்களும் ஓடிடும். என் பழத்திலிருந்து எண்ணெய் தயாரிக்கிறாங்க. இது வெயில் காலத்தில் ஏற்படும் சரும எரிச்சலுக்கும், சரும நோய்களுக்கும் தீர்வைத் தரும். நன்றி, குழந்தைகளா, மீண்டும். சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவிக்கின்றனா்: ஏசி. சண்முகம்

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா

வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


