திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடி

""ஏண்டா நேத்து யாரும் கிளாஸூக்கு வரலே?''""நாளைக்கு வந்து பார்ப்பேன்.... கிளாஸ் சுத்தமா இருக்கணும்னு நீங்கதானே சொன்னீங்க!''

News image
Updated On :18 அக்டோபர் 2021, 4:33 pm

""ஏண்டா நேத்து யாரும் கிளாஸூக்கு வரலே?''
""நாளைக்கு வந்து பார்ப்பேன்.... கிளாஸ் 
சுத்தமா இருக்கணும்னு நீங்கதானே சொன்னீங்க!''

ஜி . யனிலா,
திருவொற்றியூர்


""ஆடு, மாடு எல்லாம் வாயில்லாத பிராணிகள்!''
""அதுக்கு என்ன?''
""அதுங்க ஏன் தரையிலே படுத்துத் தூங்குது?''
""தெரியலையே.... நீயே சொல்லு...''
""அதுங்க "பாயில்லாத பிராணிகள்!''

மா . பெனட் ஜெயசிங்,
புதுதில்லி.


""அக்கா நீ எழுதின கதையிலே உப்புச் சப்பே இல்லியே!''
""படிக்க வேண்டியதுதானே....  நீ ஏன் அதை சாப்பிட்டுப் பார்த்தே?''

உமர்,
கடையநல்லூர்.


""ஆப்பிள் ஸ்வீட்டா?.... தர்பூசணி ஸ்வீட்டா?''
""இரண்டுமே ஸ்வீட் இல்லை!....  பழ வகைகள்!''

கே . இந்துகுமரப்பன்,
விழுப்புரம் - 605602


""தம்பி உங்க அப்பா டீக்கடை வெச்சிருக்காரா?''
""ஆமாம்.... ஏன் சார்?''
""..."டீக்குள் விரலை விட்டால் நந்தலாலா....'' ன்னு எழுதியிருக்கியே.... அதான்!''

ஆர் . சுந்தர்ராஜன்
சிதம்பரம் - 608001.


""ஆன் லைன் வகுப்புக்கும், நேரடி வகுப்புக்கும் என்ன வித்தியாசம்?''
""ஆன் லைன் வகுப்புலே நொறுக்குத்தீனி சாப்பிட்டுக்கிட்டே படிக்கலாம்!''
பி . கவிதா, சிதம்பரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.