பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

பொன்மொழிகள்!

உள்ளத்தில் சுறுசுறுப்பு நுழைந்துவிட்டால் அது எல்லா இன்பத்திற்கும் காரணமாகிறது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 3:12 pm


உள்ளத்தில் சுறுசுறுப்பு நுழைந்துவிட்டால் அது எல்லா இன்பத்திற்கும் காரணமாகிறது. 
- அலெக்ஸாண்டர் மோஸ்

நம்பிக்கை நிறைந்த மனிதனுக்கு ரோஜாச் செடியில் பூத்திருக்கும் மலர்கள் மட்டுமே தெரியும்! அதன் முட்கள் தெரியாது! 
- எமிலி டிக்கன்ஸன்

உழைப்பு உடலை உறுதிபெறச் செய்யும். துன்பங்கள் மனதை உறுதி பெறச் செய்யும். 
- செனேகா

வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். அதில் அனுபவங்களே பாடங்கள். 
- பெஞ்சமின் ஃபிராங்ளின்.

நல்ல எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பல மனங்களில் அதன் விதைப்பு நிகழவேண்டும்.
 - ஆபிரஹாம் லிங்கன்

அன்பு, தயை, கருணை ஆகியவற்றால் ஏற்படும் காரியங்கள் அனைத்தும் ஆனந்தத்தைக் கொண்டுவந்தே தீரும்! 
- சுவாமி விவேகானந்தர்

கீழ்ப்படியும் பயிற்சி பெற்றவன் கட்டளையிடத் தகுதியுடையவனாக ஆகிறான். 
- அரிஸ்டாட்டில்

வழிகள் இல்லாவிட்டால் என்ன?.... அதைத் தோற்றுவிக்கலாம்! 
- தாமஸ் ஆல்வா எடிசன்

துன்பங்களை அனுபவித்த காலங்களை மறந்து விடு! ஆனால் அவை உனக்குத் தந்த பாடங்களை மறந்துவிடாதே. 
-பெஞ்சமின் ஃபிராங்ளின்

தெரியாததை ஒப்புக்கொள்பவனே தெரிந்து கொள்ள முயற்சிக்கிறான். 
- அப்துல் கலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.