92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கவிஞர் சொ. அருணன்

வள்ளல் என்ற பெருமை 
    வருவ தில்லை எல்லோர்க்கும்
அள்ளிக் கொடுத்த அழகர்
    அவர்போல ஒருவ ரில்லை
 
 செல்வம் தேடிக் குவித்தார்  - அதை
    எல்லோருக்கும் கொடுத்தார்
கல்வி என்னும் கண் திறக்கக்
    கோயில் ஒன்று  எடுத்தார்         (வள்ளல்)
 
சாதி பேதம்  ஒழித்தார் -  மதச்
    சண்டைகளை மறுத்தார்
நீதியொன்றே எவர்க்கும் என்ற
    நிலையை அவரும் வகுத்தார்     (வள்ளல்)
 சங்க மன்னர் போல - தனி
    அரசு ஒன்றை அமைத்தார்
எங்கும் வறுமை தீர்க்கச்
    சமத்துவத்தைச் சமைத்தார்         (வள்ளல்)
 
பெண்கள் கல்வி பெறவே - அவர்
    பெரிய கனவு கண்டார்
கண்கள் போல அவரைக்
    காக்க வேண்டும் என்றார்            (வள்ளல்)
 
கடவுள் என்று சொல்வார் - கண்ணில்
    கண்டதில்லை நாமும்
கடவுள் வடிவில் வள்ளல்
    போற்றித் தொழுவோம் நாளும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.