பாப்பா பாப்பா ஓடிவா!
பாலும் சோறும் ஊட்டுவேன்!!
கேட்பாய் நல்ல கதை சொல்வேன்!
கிழவிப் பாட்டி அழைக்கிறேன்!!
பால்சோறு திங்க நீ மறுத்தால்..
பாத்து.. பூனைக்கு தந்திடுவேன்!
கேள் இல்லை நீ பட்டினிதான்!
கிழட்டு நாய்க்குத் தந்திடுவேன்!!
அதோ அண்ணன் கேட்கிறான்!
அந்தக் காக்காயிக்குத் தந்திடுவேன்!!
இதோ கதையும் சொல்லிடுவேன்!
இன்பப் பாப்பா ஓடிவா!!
கதை கேட்க இங்கே வந்துள்ளதே!
கேட்க நீயும் ஓடிவா!!
கிண்ணத்துச் சோறு ஊட்டிடுவேன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.