சந்தேரியின் சிறப்பு

சந்தேரி கோட்டைகள், நினைவுச்சின்னங்களுக்கு மட்டுமல்ல; அழகிய வழவழப்பு சந்தேரி புடவைகளும் பிரபலம்.
சந்தேரியின் சிறப்பு
Updated on
1 min read

சந்தேரி கோட்டைகள், நினைவுச்சின்னங்களுக்கு மட்டுமல்ல; அழகிய வழவழப்பு சந்தேரி புடவைகளும் பிரபலம்.

சந்தேரி- பழைமை வாய்ந்த நகரம். குஜராத்தின் பழைமையான துறைமுகங்கள், மால்வா, மேவார், மத்திய இந்தியா,  பகுதிகளுக்கு வியாபாரப் பாதை இந்த நகரம்.பேட்வா ஆற்றின் தென் மேற்கே அமைந்துள்ளது.  மலைகளாலும், வனப் பகுதிகளாலும் சூழப்பட்ட பகுதி. மகாபாரதத்தில் சேதி நாட்டு மன்னன் சிசுபாலன் ஆண்ட பகுதி என கூறப்படுகிறது. 

11-ஆம் நூற்றாண்டில் கீர்த்தி பால் என்ற மன்னர் இந்த நகரை உருவாக்கினார். இஸ்லாமியர்- ராஜபுத்திரர்- ஆங்கிலேயர் ஆட்சி- குவாலியர் மன்னர் என அடுத்தடுத்து ஆளுகையில் இருந்த இந்தப் பகுதி,  சுதந்திரத்துக்குப் பின்னர் மத்தியப் பிரதேசத்துடன் இணைந்தது.

இந்த நகரின் அழகே 71 மீட்டர் உயரம் கொண்ட கோட்டையாகும்.  இதன் சுற்றிலும் 5 கி.மீ. சுற்றளவுக்கு மதில்சுவர் உண்டு. இதற்கு மூன்று நுழைவுவாயில்கள். உள்ளே கில்ஜி மசூதி,  ஜெலிகாண்டா அரண்மனை, ஹஸ்ரதபு அப்துல் ரஹ்மான் கல்லறை உள்ளிட்டவை உள்ளன.

இஸ்லாமிய கட்டடக் கலைக்கும் ராஜஸ்தானுக்கு உரிய பூ வேலைப்பாடுகளுக்கு பிரபலமான பகுதியாகும்.பாதால் மஹால், பதான்தர்வாஸா, கோஷாக் மஹால், ராஜா மஹால் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இந்த நகரில் காண வேண்டியவை. 

இந்த ஊரின் மற்றொரு பிரபலம்- சந்தேரி புடவைகள். வண்ணத்துக்கும் கியாரண்டி. மஸ்லீன் துணியில் ஜரிகை முதன்முதலில் இங்குதான் அறிமுகமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com