கடி
""காலைல என்ன சாப்பிட்டே...?''""கார்பன்''""கார்பனா... என்னடா உளர்றே?''""கார்ல உட்கார்ந்து பன் சாப்பிட்டேன்... அதைத்தான் சுருக்கமா சொன்னேன்...''


""காலைல என்ன சாப்பிட்டே...?''
""கார்பன்''
""கார்பனா... என்னடா உளர்றே?''
""கார்ல உட்கார்ந்து பன் சாப்பிட்டேன்... அதைத்தான் சுருக்கமா சொன்னேன்...''
சே.தாஸன் பீவி,
கீழக்கரை.
""உங்க எதிர் வீட்டுக்காரரோட குடும்பம் கலர்புல்லான குடும்பமா... எப்படி?''
""அவரு தாத்தா பேரு கருப்பசாமி, பாட்டி பேரு நீலவேணி, அப்பா பேரு வெள்ளையன், அம்மா பேரு பச்சையம்மா... அவரோட பேரு செவத்தையா...''
மால்மகன்,
சென்னை.
""இடது கால் ரொம்ப வலிக்குது டாக்டர்...''
""வயசாயிடுச்சுல்ல...''
""வலது காலுக்கும் அதே வயசுதான டாக்டர் ஆகுது?''
""? ? ? ?''
ப.சரவணன்,
திருச்சி.
""உனக்குப் பிடிக்காத விளையாட்டு கபடியா... ஏன் பிடிக்காது?''
""அதுலதானே "படி'ங்கற வார்த்தை இருக்கு.''
ஞா.பிரபு,
இராமநாதபுரம்.
(மகனின் பள்ளி ஆசிரியர்) ""உங்க பையன்கிட்ட அலுமினியத்தைப் பத்திக் கேட்டா தெரியாதுன்னு சொல்றானே...?''
""சாரி சார்... அவன் "உலோகம்' தெரியாம வளர்ந்த பையன்.''
எல்.மோகனா,
கிருஷ்ணகிரி-635 001.
""கூகுள்ல என்ன தேடினாலும் கிடைக்கும் தெரியுமா?''
""அப்படீன்னா... தொலைஞ்சுபோன என் பென்சிலை கண்டுபிடிச்சுக் கொடுடா...''
"! ! ! !'
வெ.சென்னப்பன்,
அரூர்-636 903, தருமபுரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...