92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

DIN

"ரீமா... நீ ஏன் ஆன் லைன் கிளாஸ் ஒன்னுகூட அட்டண் பண்ணல...?''
"அது ஆண்களுக்கான கிளாசுன்னு நினைச்சுட்டேன் மிஸ்...''

"மாணவர்களே... நீங்க படிச்சு முடிச்சதும்  என்ன செய்வீங்க? ஒவ்வொருத்தரா சொல்லுங்க...''
(மாணவன் ஒருவன்) "நான் புக்கை மூடி வெச்சிருவேன் சார்...''

"நீர்யானை படம் வரையச் சொன்னா... யானை படம்  வரைஞ்சிருக்கியே...''
"அவசரப்படாதீங்க சார்... அந்த யானை மீது  தண்ணிய ஊத்தி நீர்யானை ஆக்கிடுறேன்...''

"காப்பிக்கு சர்க்கரை வாங்கிட்டு வாடான்னா.. ரெண்டு வாழைப்பழம் வாங்கிட்டு வந்திருக்கே...?''
"கடையில சர்க்கரை தீர்ந்து போச்சாம்மா... அதான் கடைக்காரர் வாழைப்பழத்துல சர்க்கரை இருக்கு வாங்கிட்டுப் போன்னு கொடுத்தார்.''

"வரலாற்றில் நாம இடம்பெற ஈஸியா ஒரு வழி இருந்தா சொல்லுடி''
"வரலாறு புத்தகத்தை வாங்கி, அதுல நம்ம பேரை எழுதிவச்சா போச்சு...''

"நேத்து மிருகக்காட்சி சாலைக்குப் போனபோது ஒரு சிங்கம் எங்களை நோக்கி வேகமா ஓடுவந்துதுடா?''
"அச்சச்சோ... அப்புறம் என்ன ஆச்சு?''
"நடுவுல கம்பி வலை இருந்ததுனால வரமுடியாம உள்ளயே நின்னுடுச்சு...''
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.