""அண்ணாச்சி.. கோழிமுட்டை என்ன விலை?''
""கோழி 100 ரூபாய், முட்டை 4 ரூபாய் தம்பி''
""? ? ? ?''
கே.அனந்தநாராயணன்,
மருங்கூர்.
""டாக்டர் கண் தெரிய மாட்டேங்குதுன்னு சொன்னதற்கு முகம் பார்க்கும் கண்ணாடியைத் தர்றீங்களே...?''
""இதுல பாருங்க உங்க கண் நல்லா தெரியும்...''
க. நாகமுத்து,
திண்டுக்கல்.
(வீட்டு எஜமானி வேலைக்காரியிடம்)
""அழுகின வாழைப் பழத்தை எடுத்து ரோட்டுல போற மாடுக்குப் போடும்மா...''
""நாளைக்குப் போடறேம்மா...''
""ஏன் மாடு வரலையா?''
""வாழைப்பழம் இன்னும் அழுகலையே...''
ஆர்.சுவைதா
பேராவூரணி(அஞ்), தஞ்சை (மாவ)
""என்னோட கையில இருந்த தர்பூசணி நழுவி ரோட்டுல ஊத்தியிருந்த தார்மேல விழுந்துடுச்சுடா...''
""அடடா.. அப்புறம் என்னாச்சு?''
""தர்பூசணி "தார்'பூசணியாயிடுச்சு...''
மு.நாகூர்,
கீழக்கரை.
""பல்லு வலிக்கு மருந்து கொடுத்தேனே... நல்லா கேட்டுதா?''
""ஒன்னும் கேட்கலையே... அந்த மருத்து பேசுமா டாக்டர்?''
""! ! ! !''
பஞ்சு உத்தண்டன்,
நெய்வேலி வடகுத்து.
""அண்ணே... காப்பிதண்ணி குடிக்கிறீங்களா...?''
""காப்பி மட்டும் குடிக்கிறேன்... தண்ணி இப்ப வேண்டாம்..''
""! ! ! !''
கே.அருணாசலம்,
தென்காசி-627 811.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


