92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தினமணி

"நிலாவுல தேன் கூடுகட்டினா நிலா என்னவாகும்...?''
"தேன்நிலவு ஆகும்''

"உங்கிட்ட ஒரு லட்ச ரூபா இருக்கு. அதை ஒரு கோடியா ஆக்கணும்னா எத்தனை சைபர் சேர்ப்பே...?''
"ஒரு சைபர்கூட சேர்க்க மாட்டேன் சார்... அப்புறம் சைபர் கிரைம் போலிஸ் வந்து  என்னைப் பிடிச்சிடும்.''

"ஒரு பஸ்சுல பேனாவும், பின்னும் ஊருக்குப் போச்சு. பேனா சீட்டுல உட்கார்ந்து போச்சு, பின் நின்னுகிட்டே பயணம் 
செஞ்சுது.. ஊர் வந்தவுடன் எது முதலில் 
இறங்கும்?''
"பின்தான் இறங்கும்''
"எப்படி சொல்றே...?''
"பஸ்ஸில் "நின்ற பின்' இறங்கவும்னு போட்டிருக்கே...''

(பாட்டி பாப்பாவுக்குக் கதை 
சொல்கிறார்) 
"ஒரு ஊர்ல ஒரு புலி இருந்துச்சாம்...''
"புலி ஊர்ல இருந்தால் அது ஊரு இல்ல பாட்டி... காடு. இதுகூடத் தெரியலையே...''
"! ! ! ''

" நீ ஏன்  ஹோம் ஒர்க் எழுதிட்டு வரலை?''
"நான் ஹோம்ல இல்ல சார். ஹாஸ்டல்ல இருக்கேன்... அதுதான் எழுதல...''

"அக்கா... நீ செய்யற வேலையை நம்ம வீட்டு நாய் மாத்தி செய்யும்''
"எப்புடியா...?''
"நீ கூட்டுவே... நம்ம நாய் குரைக்கும்...''
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.