தெரியுமா?

ஐஸ்லாந்து - பனிப்பாறைகள் கொண்ட நாடு. இந்தப் பனிப்பாறைகள் சிலவற்றில்  குகைகள் உண்டு. இவை நீர் அடித்துச் செல்லப்பட்டதன் விளைவால் எழுந்தவை. இவற்றில் ஒரு குகை " வட்னாஜோகுல்' என்பதாகும்.
Published on
Updated on
1 min read

ஐஸ்லாந்து - பனிப்பாறைகள் கொண்ட நாடு. இந்தப் பனிப்பாறைகள் சிலவற்றில்  குகைகள் உண்டு. இவை நீர் அடித்துச் செல்லப்பட்டதன் விளைவால் எழுந்தவை. இவற்றில் ஒரு குகை " வட்னாஜோகுல்' என்பதாகும்.

குல்சார்லோன் நகரில் இருந்து ஜீப்பில் பயணித்து சுமார் நான்கரை மணி நேரத்தில் இந்தக் குகையின் வாசலை அடையலாம். அங்கேயே பனி உருகி நீராகக் கொட்டும் நீர்வீழ்ச்சியையும் காணலாம்.

ஜீப்பில் பயணிக்கும்போதே நீர்வீழ்ச்சிகள், இயற்கைப் பூங்கா, மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்ட உப்புநீர் ஏரியையும் காண முடியும்.

குகைக்குள் நுழைந்துவிட்டாலே அற்புதம். இந்தக்  குகைக்கள் நுழையவே அரை மணி நேரம் மலை ஏறுவது போன்று பயணிக்க வேண்டும். பனிப்பாறை என்றால்,  கட்டணம் 147 டாலர். 8 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி. விசேஷ ஆடை, பூட்டுகள் தரப்படும். இதை அணிந்துகொண்டுதான் நடக்க வேண்டும். ஹெட்இயர் உண்டு. படிகக் கல், குகையும் வழியில் பார்க்கலாம். கண்ணைப் பறிக்கும்.

-ராஜேஸ்வரி

"கல்ச்சர்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "பண்பாடு' என்று தமிழில் மொழி பெயர்த்தவர் ரசிகமணி டி.கே.சி. ஆவார். இதேபோல், "பார்லிமென்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக "பாராளுமன்றம்' என்ற சொல்லை பரிமாற்கலைஞர் மொழிபெயர்த்தார்.

 திரைப்படத்தைப் பார்த்து கட்டபொம்மனின் வயது 50-க்கும் மேல் இருக்கும் என பலரும் நினைக்கிறார்கள்.  உண்மையில் கட்டபொம்மனின் வயது 39. அவர் பிறந்தது 3.1.1760.  தூக்கிலிடப்பட்ட நாள் -16.10.1799.

வங்கிகளில் லாக்கர்களைப் பெட்டகம் என்று இப்போது அழைக்கிறோம். ஆனால், சங்கக் காலத்திலேயே "வைப்புழி' என்ற சொல்லால் அழைக்கப்பட்டது. திருக்குறள், நாலடியார் ஆகிய நூல்களில் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com