

1973ஆம் ஆண்டு ஏப். 3இல் உலகில் முதன்முதலாக கைப்பேசி அறிமுகமானது. மார்ட்டின் கூப்பர் என்ற அமெரிக்கர் இதைக் கண்டுபிடித்தார்.
நியூஸிலாந்து அரசு அண்மையில் தனது புதிய கொடியை வடிவமைக்கச் செலவிட்ட தொகை ரூ.1.7 கோடியாகும்.
உலகில் பேசப்படும் மொத்த மொழிகள் 2,796. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் 1,652.
மொழிகளில் உள்ள எழுத்துகள்: தமிழ்247, சீனம் 214, ஆங்கிலம் 26, இத்தாலி 20, லத்தீன் 22, கிரேக்கம் 24, ஜெர்மன் 26, பிரெஞ்சு 26, ஸ்பானிஷ் 27, அராபிக் 28, துருக்கி 28, பாரசீகம் 31, சம்ஸ்கிருதம் 46.
உலகில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழி "மண்டாரின்' எனும் சீன மொழியாகும். இரண்டாம் இடத்தை ஆங்கிலம் வகிக்கிறது.
கங்காரு குட்டி "ஜோயி' என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் அண்டைநாடான நேபாளத்தில் கடுகு எண்ணெயை அதிகம் உற்பத்தியாகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ தோற்றுவித்த கலைக்கழகமே உலகில் தோன்றிய முதல் பல்கலைக்கழகமாகும்.
இந்தியாவில் ஆதார் அட்டை முதன் முதலில் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் வழங்கப்பட்டது.
வங்க தேசத்தில் முராஸ் என்ற இனத்தைச் சேர்ந்த ஆண்கள் தலையில் பூச்சூடுகின்றனர்.
இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுவது குப்தர்கள் ஆட்சியில் இருந்த காலம்தான்.
"இந்திய நெப்போலியன்' என்று அழைக்கப்பட்டவர் சமுத்திரகுப்தன்.
நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் குப்த மன்னர் குமாரகுப்தன்.
நீதிச் சங்கிலி எனும் அமைப்பை உருவாக்கியவர் ஜஹாங்கீர்.
இந்தோனேஷியா நாட்டில் மிகப் பெரிய தீவு போர்னியா.
தெர்மாஸ் பிளாக்ஸ் குடுவையைக் கண்டுபிடித்தவர் யூஜின் கோல்ஸ்டீன்.
டெக்சாஸ் எண்ணெய் கிணறுதான் உலகிலேயே மிகவும் ஆழமானது.
முதலாம் போப் ஆண்டவரின் பெயர் செயின்ட் பீட்டர்.
துருக்கி நாட்டின் முதல் பெண் பிரதமர் தான் சூ சில்லர்.
அமோனியா திரவத்தின் மீது ஐஸ்கட்டியை வைத்தால் உருகாது.
பார்சி இனத்தவர்களின் புனித நூல் ஜெந்த் அவஸ்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.