இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தெரியுமா?

விண்வெளியில் 2026 ஜனவரி வரையில்11 ஆயிரம் செயற்கைப் பொருள்கள் ஏவப்பட்டுள்ளன. இதில் சாட்லைட்டுகளின் எண்ணிக்கை மட்டும் 6,700.

News image
Updated On :28 மார்ச் 2026, 6:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ச. நாகராஜன்

விண்வெளியில் 2026 ஜனவரி வரையில்11 ஆயிரம் செயற்கைப் பொருள்கள் ஏவப்பட்டுள்ளன. இதில் சாட்லைட்டுகளின் எண்ணிக்கை மட்டும் 6,700. இந்தியா 2025-ஆம் ஆண்டு முடிய தனது பங்குக்கு 136 சாட்லைட்டுகளையும், மற்ற நாடுகள் 400 சாட்லைட்டுகளையும் ஏவியுள்ளன.

 ஜேன் ஷிராஜ் என்ற ஐந்து வயது சிறுவன் 195 நாடுகளின் பெயர்களை இரண்டு நிமிடம் 14 விநாடிகளில் கண்ணை மூடிக் கொண்டு கூறுகிறார். இதற்காக இவரது பெயர் இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்ஸில் இடம் பெற்று விட்டது.

பதினாறு வயதான ஓவன் கூப்பர் என்ற சிறுவன் 2026-ஆம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான விருதை கோல்டன் க்ளோப் அவார்ட்ஸின் 83-ஆவது ஆண்டு விழாவில் பெற்றுள்ளார். நெட்ஃப்ளிக்ஸில் அடொலெசென்ஸ் என்ற டி.வி. சீரியலில் புதுமுகமாக நுழைந்து கூப்பர் நிகழ்த்திய சாதனை இது.

பிரபல ஜெர்மானிய விஞ்ஞானியும், கணித மேதையுமான கார்ல் ப்ரெட்ரிக் காஸ் தனது ஏழாவது வயதிலேயே ஓர் அதிசய சாதனையைச் செய்தார். இவர் ஒன்றிலிருந்து நூறு வரை உள்ள எண்களை சில விநாடிகளில் கூட்டி விடையைச் சொல்லி அனைவரையும் வியக்க வைத்தார். 1+100, 2+99 என்று 50 ஜோடி எண்களை மனதில் கூட்டி விடையை 5050 என்று சில நொடிகளில் கூறினார்.

தந்தை, மந்திரங்களைக் கற்றுத் தருபவர், கல்வி கற்றுத் தரும் ஆசிரியர், அன்னம் அளிப்பவர், பயத்தைப் போக்குபவர் ஆகிய ஐந்து பேர் தந்தையாகக் கருதப்பட வேண்டியவர் என்று அறநூல்கள் கூறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.