ஸ்ட்ராபெர்ரி, புளுபெர்ரி, பிளாக்பெர்ரிகளை அறிந்திருப்பீர்கள். ஆனால், பெர்ரி குடும்பத்தில் மீதியுள்ள பழங்கள்: மல்பெர்ரி, அகாய்பெர்ரி, கோஜிபெர்ரி, டாக்ரோஸ் பெர்ரி, ராஸ்பெர்ரி.
போர்விமானங்கள் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும். ஆனால், வர்த்தக விமானங்கள் 31 ஆயிரம் அடி முதல் 41 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும். "ஏர்போர்ஸ் ஒன்' விமானம் 45 ஆயிரம் அடி உயரத்தில் பறப்பதால் உந்துச் சக்தி அதிகம் கிடைக்கிறது.
உலகளவில் நீரூக்கடியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய சிலை ஓஷன் அட்லஸ். இது கரீபிய நாடான பஹாமாஸில் உள்ள நாசாவ் கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜேசன் டிகேயர்ஸ் டெய்லர் என்பவர் உருவாக்கினார். இது 18 அடி உயரும் 60 டன் எடையும் கொண்டது.
உலகளவில் பாய்ந்தோடும் ஆறுகளில் அதிக ஆழம் கொண்டவற்றுள் ஒன்று காங்கோ. இந்த ஆறு 720 அடி ஆழம் கொண்டது. ஆப்பிரிக்காவில் ஓடும் இந்த ஆறு நைல் நதிக்கு அடுத்தபடியாக மிக நீளமான ஆறாகவும் விளங்குகிறது. பூமத்திய ரேகை பகுதியை இரண்டு முறை சந்திக்கும் ஆறு என்ற சிறப்புக்குரியது.
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் சிலி நாட்டின் ஆதிக்கத்துக்கு உள்பட்ட ஒரு பகுதி ஈஸ்டர் தீவு. இங்குள்ளபழமையான மனித உருவச் சிலைகள் உலகப் புகழ் பெற்றவை. இங்கு கடற்கரை மண் அரிப்பு ஏற்பட்டுவருவதால், சிலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கி.மு. 2500-இல் பாபிலோனியாவில் வரையப்பட்ட மிகப் பழமையான வரைபடம் அமெரிக்க மியூஸியம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வரைபடம் களிமண் பலகையில் வரையப்பட்டுள்ளது.
ஏ.டி.எம். இயந்திரத்தை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெபர்ட் பரோன் என்பவர் கண்டறிந்தார்.
"நியூயார்க் வேர்ல்டு' எனும் தினசரி நாளிதழில் 1913-ஆம் ஆண்டு டிசம்பர் 13-இல் முதன்முதலாகக் குறுக்கெழுத்துப் போட்டி வெளியிடப்பட்டது. அதை எழுதியவர் ஆர்தர்வைனி. தனது தாத்தா சிறுவயதில் வயல்வெளியில் விளையாடிக் காட்டிய விளையாட்டை வைத்து இந்தக் குறுக்கெழுத்துக் கட்டங்களை ஆர்தர் வைனி உருவாக்கினார். 1928-இல் இரண்டு அமெரிக்கர்கள் குறுக்கெழுத்துப் போட்டி நூல்களை வெளியிட்டனர். இந்த நூல்கள் தலா 50 ஆயிரம் பிரதிகள் விற்றன. இந்தப் போட்டிக்கான அகராதிகளும் வெளியிடப்பட்டன. 1930-ஆம் ஆண்டில் "டைம்ஸ் ஆஃப் லண்டன்' என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் குறுக்கெழுத்துப் போட்டி வெளியானதால், இன்னும் பிரபலம் அடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
தொகுதி மறுசீரமைப்பு: காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் எதிா்ப்பு
தெரியுமா?

தெரியுமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

