குட்டிக் கிளிகள் இரண்டுமே
கொஞ்சிக் கொஞ்சிப் பேசின
பட்டுப் பூச்சிகள் பறந்து வந்து
பதுங்கிப் பதுங்கிக் கேட்டது!
காக்கா பாட்டு பாடியதும்
கண்ண யர்ந்து போனது
கொக்கு பறந்து போனதுமே
குளத்து மீன்கள் சிரித்தது!
மயிலும் தோகை விரித்தாட
மேகம் கறுத்து போனது
குட்டிக் கிளிகள் தாயிடமே
அடைக்கல மாகிச் சிரித்தது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.