தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: எத்தனை வகை ஓவியங்கள்!

புறநகர்ப் பகுதிகளில் முழுமையான மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கும் மக்கள் ஏராளம். அதிலும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மையங்கள் இல்லாமல் நகரத்தை நாடி, கைகளில் குழந்தையோடு கண்களில் நீரோடு வரும் பெற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:19 pm

சாருகேசி

புறநகர்ப் பகுதிகளில் முழுமையான மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கும் மக்கள் ஏராளம். அதிலும்

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மையங்கள் இல்லாமல் நகரத்தை நாடி, கைகளில் குழந்தையோடு கண்களில் நீரோடு வரும் பெற்றோர்கள் நிலைமை இன்னும் கவலை தருவது. இந்தப் பின்னணியில், ஜமீன் பல்லாவரம் பகுதியில் பாரதி நகர் முதல் தெருவில் பல்லாவரம் "குழந்தைகள் மருத்துவ மையம்' ஒன்றை, பாரதி நகரைச் சேர்ந்த பொதுச் சுகாதார மைய

அறக்கட்டளையும், பல்லாவரம் குழந்தைகள் மருத்துவ மைய அறக்கட்டளையும் இணைந்து, திறந்து வைத்திருப்பதைப் பாராட்ட வேண்டும்.

இதற்காகப் பின்னாலிருந்து உழைத்து, பொறுப்பான மருத்துவரைக் கொண்டு வந்து மருத்துவ மையம் இயங்க உதவியிருக்கின்றனர் இந்தப் பகுதியைச் சேர்ந்த எம்.கோபாலகிருஷ்ணன், சுகாதார மைய

அறங்காவலர்களில் ஒருவரான பேராசிரியர் (டாக்டர்) பி.எஸ்.சோமசுந்தரம், அமெரிக்க தமிழ் மருத்துவச் சங்கத் தலைவர் மற்றும் குழந்தைகள் மருத்துவ மைய அமைப்பாளர் டாக்டர் ஆதிநாராயண் ஆகியோர். அந்தப் பகுதி மக்களுக்கு இனி தரமான மருத்துவ வசதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

தொழிலதிபர்கள் ராமசுப்பிரமணிய ராஜா, எம்.பி.புருஷோத்தமன், டாக்டர் ஐசரி கணேஷ், டாக்டர் ஏ.எம்.சுவாமிநாதன் (ஐ.ஏ.எஸ்.ஓய்வு) ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள்.

இந்தக் குழந்தைகள் நல மருத்துவ மையத்தின் மருத்துவர் டாக்டர் அரியநாயகம், நோயுற்ற

குழந்தைகளுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷமாக இருந்து செயல்பட்டு வசதியற்ற மக்களின் வாழ்த்துகளைப்

பெறட்டும்!

தஞ்சை நால்வரின் வழியில் வந்த நாட்டிய ஆசான் குரு கிட்டப்பா பிள்ளையின் நினைவைப் போற்றும் வகையில் "தபஸ்யா கலா சம்பிரதாயா' அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் நடன நிகழ்ச்சி ஒன்றை வழங்குவது உண்டு. அந்த நிகழ்ச்சியில் நடனத்துறையிலும், இசைத் துறையிலும் ஆழ்ந்த அறிவு பெற்ற டாக்டர் பி.எம். சுந்தரம் பங்கு பெறாமல் இருப்பதே இல்லை. இந்த ஆண்டும் அவர் தஞ்சை நால்வர் குறித்துப்

பேசினார். வளரும் நடனக் கலைஞர்கள் நிவேதா, ஸ்நேகா, கிருத்திகா மூவரும் ஜதிஸ்வரமும், ஸ்வர ஜதியும், சியாமா சாஸ்திரியின் "கிருப ஜுடவம்மாவும்' வழங்கினார்கள்.

""நாங்கள் எங்கள் குரு கிட்டப்பா பிள்ளை வழியை அப்பட்டமாகப் பின்பற்றுபவர்கள். சமரசம் செய்துகொள்ளாதவர்கள்'' என்றார் "தபஸ்யா கலா சம்பிரதாயா'வின் இந்து வர்மா.

டிசைனர் அடவுகள், டினோசர் முத்திரைகள் என்று பாடாய்ப் படுத்தாமல், குரு சொல்லிக் கொடுத்ததைத் தங்கள் கற்பனை வளத்தைக் குழைத்து, சம்பிரதாய

மீறல்கள் ஏதும் செய்யாமல் இருந்தால் அந்த நாட்டியம் நிச்சயம் பளிச்சென்று இருக்கும்.

பந்தநல்லூர் எம்.கோபாலகிருஷ்ணனும், சின்னய்யா சிவகுமாரும் இவர்களுக்கு உறுதியான துணையாக இருப்பது இவர்களின் பாக்கியம். சிவானந்தம்-சாரதா சிவானந்தம் தம்பதியின் மகனான சின்னய்யா சிவகுமார் அன்றைக்கு வயலின் வாசித்தார். அத்தோடு "நிகழ்ச்சிக்கான முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார்' என்று பி.எம். சுந்தரம் பாராட்டினார். சின்னய்யா சிவகுமாருக்கு நியாயமாகச் சேர வேண்டிய பாராட்டுதான் அது!

மாஸ்டரி ஆர்டிஸ்ட் சொசைடியின் முதல் குழுக் காட்சி "வர்ண கற்பனை-09' லலித் கலா அகடமியில் சென்ற வாரம் முடிவுற்றது. கார்ட்டூனிஸ்ட்-பத்திரிகையாளர் மதன் துவக்கி வைத்த இந்தக் காட்சியில் பங்கு கொண்ட

வர்கள் வெறும் ஓவியர்கள் மட்டுமல்ல என்று

பின்னர்தான் தெரிந்தது.

  மகாதேவன் ஒரு பிசினஸ்மேன். தானாக ஓவியம் வரையக் கற்றுக் கொண்டவர். வைபவி கணினி மென் பொருள் துறையைச் சேர்ந்தவர். கேப்ரியல் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் டிசைனர். ராஜ மாறன் கார்ட்டூனும் வரைவாராம். ஷீபா, டிசைன் ஸ்டூடியோ நடத்துபவர். ராஜ், வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியர்! பிரிட்டோவும் வேலம்மாளில் ஆசிரியர்தான். விஜய், டிசைனர். பென்சில்

ஸ்கெட்சும், எண்ணெய் வண்ண ஓவியங்களும் இவர் சிறப்பு. (பத்திரிகைகளிலும் படம் போட்டிருக்கிறார்!) பாலா, எஸ்ஆர்எம் பல்கலைக் கழக மரைன் என்ஜினீயர். (இடைவிடாத 58-மணி நேர ஓவிய உலக ரிக்கார்டை முறியடிக்க முயன்றவராம்!)

இப்போதெல்லாம் நிறைய ஆர்ட் காலரிகள், ஆங்காங்கே புதிய புதிய ஓவியர்களை அடையாளம் காட்டுகின்றன. புதிய பாணி ஓவியங்களும் வெளிக் கொண்டு வரப்படுகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இப்போது புதிய ஓவியர்களின் படைப்புகளுக்கு வரவேற்பு இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மகாத்மா காந்தியின் செயலராகப் பணியாற்றிய வி.கல்யாணம், எண்பதைத் தாண்டிவிட்டாலும் சுறுசுறுப்புக் குறையாதவர். தேசிய பாதுகாப்புக் கழகம் என்ற பொது நல அமைப்புக்குத் தலைவராக இருக்

கிறார். வழக்குரைஞர் எம்.குமார் இதன் செயலர். கொள்கை பரப்புச் செயலாளர் வி.சுந்தரம். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி.

நவம்பர் 23 அன்று முழு நாள் நிகழ்ச்சியாக, தே.பா.க ஏற்பாடு செய்திருக்கும் கருத்தரங்கில் முன்னாள் விஜிலன்ஸ் கமிஷ்னர் என்.விட்டல் "ஊழல்' பற்றிப் பேசுகிறார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜி.சுந்தரம் "உலகமயமாக்கல்' பற்றியும், இன்னோர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.சுந்தரம் "கல்வித் துறை' பற்றியும், சர்வதேச உணவு நிபுணர் ஸ்வாதி அய்யங்கார் "உணவுத் துறை' பற்றியும் பேசுகிறார்கள்.

இது திறந்த நிலை விவாத அரங்காக இருக்கும்.

எனவே பங்கு கொள்ள விரும்புகிறவர்கள் 20-11-09 தேதிக்கு முன், 94440 20658 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.