வித்தியாசமான சிந்தனை, தெளிவான நோக்கம், எதையும் கலைக்கண்ணால் பார்ப்பது போன்ற குணாதிசயங்கள் ஓவியர்களுக்கே உரித்தானது. ஓவியம் கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு எனக் கூறலாம். சிவகாசியைச் சேர்ந்த பா.சுஜாதா வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் பிற பெண்களுக்கு ஓவியப் பயிற்சி அளிப்பது, ஓவியம் வரைந்து விற்பனை செய்வது என தனது வீட்டையே கலைக்கோயிலாக மாற்றிஉள்ளார். "ஷியாம் ஆர்ட்ஸ்' என்னும் ஓவியப் பயிற்சி பள்ளி நடத்தும் சுஜாதா அவரின் கலையார்வம் குறித்து நம்மிடம் பேசியதிலிருந்து...
""சிறுவயதிலிருந்தே இயற்கையாகவே எனக்கு ஓவியம் வரையும் திறமை இருந்தது. ஆறாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். இதுவே எனக்கு ஓவியம் வரையத் தூண்டுகோலாக அமைந்தது.
சென்னையில் தனியார் ஓவியப் பள்ளியில் ஆயில் பெயிண்டிங், ப்ரிஹேண்ட் டிராயிங் ஆகியற்றைப் படித்து சான்றிதழ் பெற்றுள்ளேன். தஞ்சாவூர் பெயிண்டிங், ராஜஸ்தான் ஓவியம் ஆகியவற்றை விருதுநகரில் ஒருவரிடம் கற்றேன்.
நான் வரைந்த ஓவியங்களை வீட்டின் வரவேற்பு அறையில் வைத்துவிடுவேன். இதைப் பார்த்த பலர், திருமண நாள் விழா, புதுமனைப் புகுவிழா என பல விழாக்களுக்கு பரிசளிக்க ஓவியம் வரைந்து கொடுக்கச் சொன்னார்கள். இப்படி இருந்த நிலையில் பலர் என்னிடம் ஓவியம் பயில ஆர்வம் காட்டினர்.
இதையடுத்து, 2003 ஆம் ஆண்டு ஷியாம் ஆர்ட்ஸ் என்ற பெயரில் ஓவியப் பயிற்சிப் பள்ளியைத் தொடங் கினேன். அப்போது 6 பேர் என்னிடம் பயிற்சி பெற்றனர். தற்சமயம் பள்ளி, கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள் என 30 பேர் என்னிடம் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
தஞ்சாவூர் பெயிண்டிங், ஆயில் பெயிண்டிங், துணியில் வரைவது, வாட்டர் கலர் பெயிண்டிங், கிளாஸ் பெயிண்டிங், ராஜஸ்தான் பெயிண்டிங் எனப் பலவகையான ஓவியங்கள் வரையப் பயிற்சி அளித்து வருகிறேன். படிக்க வருகிறவர்கள் எதைப் படிக்க விரும்பு கிறார்களோ, அதை பயிற்றுவிக்கிறேன்.
தற்போது பலர் வீடுகளில் ஓவியங்களை வைப்பதற்கு நிறைய ஆர்டர்கள் வருகின்றன. அதை வரைந்து கொடுக்க 3 உதவியாளர்களை வைத்துள்ளேன். எனது முயற்சிக்கு கணவர் க.பாலமுருகன் மிகவும் உறுதுணையாக உள்ளார்.
தற்போது சேலை மற்றும் சுடிதாரில் ஓவியம் வரைய பல பெண்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். எனவே, சேலை மற்றும் சுடிதாரில் வேலைக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.3000 வரை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர் ஓவியம் பரிசளிக்கப் பயன்படுவதால் ரூ. 2500 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யலாம். பெண்கள் வீட்டிலிருந்த படியே இதன்மூலம் பணம் சம்பாதிப்ப தோடு, மனத்திருப்தியும் ஏற்படும்.
சிவகாசியில் ஒரு சிறப்பான ஓவியக் கண்காட்சி நடத்த வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக தற்போது சுமார் 40 ஓவியங்கள் வரைந்துள்ளேன். தக்க தருணம் பார்த்து, சென்னை போன்ற நகரங்களில் நடக்கும் ஓவியக் கண்காட்சியைப் போல சிவகாசியிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளேன்'' என்றார் சுஜாதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

மழையூரில் நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் தீக்கிரை

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலில் நிறைவேற்றியவா் ஸ்டாலின்: கி. வீரமணி

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


