

மது வாழ்க்கைமுறைதான் எவ்வளவு வேகமாக மாறி வருகிறது. திரும்பும் பக்கமெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கடைகள். பீட்ஸô, பாஸ்டா என்று உணவுவகைகள். எங்கும் எதிலும் புதுமையை நாடும் மக்களுக்குத்
தீனிபோடத்தான் எத்தனை எத்தனை சமாச்சாரங்கள்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வேலஸ் கார்டனில் "டஸ்கானா பிஸரியா' என்ற பெயரில் ஓர் இத்தாலி உணவகம் திறக்கப்பட்டு கடந்த 5 மாதங்களாக ஹவுஸ் ஃபுல்லாக இருக்கிறது.
""எல்லா இடங்களிலும்தான் பீட்ஸô போன்ற இத்தாலிய உணவுவகைகள் கிடைக்கின்றன. உங்கள் உணவகம் எந்தவிதத்தில் வித்தியாசமானது?'' என்று அதன் உரிமையாளர் விபின் சச்தேவிடம் கேட்டோம்.
""பீட்ஸôவில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று அமெரிக்க பீட்ஸô. இன்னொன்று இத்தாலி பீட்ஸô. எல்லா இடங்களிலும் கிடைக்கிற பீட்ஸô அமெரிக்க வகை. அதைச் சாப்பிட ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். நிறைய வெண்ணெய்யும், எண்ணெய்யும் கலந்து செய்திருப்பார்கள். ஆனால் அதைச் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு கெடுதி?
எங்களுடையது முழுக்க முழுக்க இத்தாலிய பாணியில் செய்யப்பட்ட உணவு வகைகள். பீட்ஸô,பாஸ்டா, சூப், சாலட், டெஸர்ட் என ஐந்து வகை இத்தாலிய உணவு வகைகளில் நிறைய வெரைட்டிகளை அதற்கேயுரிய இயல்பு கெடாமல் செய்து அளிக்கிறோம்.
நாங்கள் எங்களுடைய உணவகத்தில் தயாரிக்கும் உணவுகளுக்காகப் பெரும்பாலான பொருட்களை இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்கிறோம். காய்கறிகளை மட்டும் இங்கே வாங்குகிறோம். அதுவும் நன்கு கவனித்துத் தரமான காய்கறிகளை மட்டுமே பொறுக்கி எடுத்து வாங்குகிறோம்.
இன்னொரு முக்கியமான விஷயம், வழக்கமாக எல்லா உணவகங்களிலும் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்துவதில்லை. ஒரு லிட்டர் 80 ரூபாய் கொடுத்துச் சாதாரண சமையல் எண்ணெய்யை வாங்காமல் 1 லிட்டர் ரூ.400க்கும் மேல் உள்ள ஆலிவ் எண்ணெய்யை வாங்கியே முழுக்க முழுக்கச் சமையல் செய்கிறோம். இதனால் நாங்கள் தயாரிக்கும் உணவு வகைகளில் 8 சதவீதம் மட்டுமே கொழுப்புச் சத்து இருக்கிறது. சர்க்கரைச் சத்து அறவே இல்லை. பிற உணவகங்களில் பெரும்பாலும் மைதா மாவைப் பயன்படுத்துவார்கள். நாங்கள் கோதுமை மாவை மட்டுமே பயன்படுத்துகிறோம். கோதுமையில் உள்ள பல சத்துகள் மைதாவில் இல்லை.
நாங்கள் இந்த உணவகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக 52 நாட்கள் உணவுத் தயாரிப்பிலும், சர்வீஸிலும் இங்கு வேலை செய்பவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்தோம். 99.9 % திருப்தி எங்களுக்கு ஏற்பட்ட பின்புதான் நாங்கள் உணவகத்தை ஆரம்பித்தோம்.
உணவகத்தை ஆரம்பித்துக் கொஞ்சங் கொஞ்சமாகத் தரத்தை உயர்த்துவதைவிட ஆரம்பத்தில் இருந்தே முழு அளவுக்குத் தரமான உணவு வகைகளை அளிப்பதே எங்கள் நோக்கம்.
இங்கு வருகிறவர்கள், எங்களுடைய சுவையான உணவுகளுக்காக வருகிறார்கள். எங்களுடைய உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்பதற்காக, மனதுக்கு ரம்மியமாக உள்ள நல்ல சூழ்நிலையை அனுபவிப்பதற்காக வருகிறார்கள். என்றாலும் பணத்தைத் தேவையில்லாமல் ஒருபோதும் செலவழிக்க விரும்பாதவர்கள் அவர்கள்.
எனவே இங்கு வருகிற எங்களுடைய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு மேலேயே நாங்கள் அவர்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறோம்.
அரசியல் தலைவர்கள், சினிமாத்துறையினர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், டாக்டர்கள், வக்கீல்கள், சாதாரண மனிதர்கள் என எங்களுக்கு நிறையக் கஸ்டமர்கள் பெருகிவிட்டனர்.
இதற்குக் காரணம் நாங்கள் வாடிக்கையாளர்களின் உடல் நலனில் கொண்ட அக்கறைதான். அவர்களுக்கு முழுத் திருப்தி ஏற்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் எடுத்துக் கொள்கிற சிரத்தைதான்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சூர்யாவின் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் பட டீசர் அப்டேட்

கருப்பு படத்தின் அடுத்த பாடலைப் பாடும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?
தேர்தல் நெருங்கும்போது ஒரு ஃபைனல் டிவிஸ்ட் இருக்கும்! - அண்ணாமலை
ஞானபீட விருது வென்ற வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
வீடியோக்கள்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

