நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வழிகாட்டி!

நகரத்துக்கு வந்து தொலைந்துபோனவர்கள் பற்றித் தெரியும். காடுகளில் தொலைந்துபோனவர்களைப் பற்றித் தெரியுமா? அடர்ந்த காடுகளில் ஆய்வு செய்வதற்காக உள்ளே போய் வருதற்கு வழி தெரியாமல் அவதிபட்டவர்கள் ஏராளம். இத்தக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:50 am

எம். ஆனந்த்

நகரத்துக்கு வந்து தொலைந்துபோனவர்கள் பற்றித் தெரியும். காடுகளில் தொலைந்துபோனவர்களைப் பற்றித் தெரியுமா? அடர்ந்த காடுகளில் ஆய்வு செய்வதற்காக உள்ளே போய் வருதற்கு வழி தெரியாமல் அவதிபட்டவர்கள் ஏராளம். இத்தகைய ஆய்வாளர்கள், தங்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படுவதற்கு டிரக்கர்கள் உதவியை நாடுவார்கள்.

வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள் பற்றி ஆய்வுகளில் மாணவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், மற்றும் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. ஆய்வுக் கூடங்களில் அமர்ந்து கொண்டு ஆய்வு செய்வதைப் போல் எளிதான விஷயமல்ல, காட்டுக்குள் சென்று ஆய்வில் ஈடுபட்டு தகவல்கள் சேகரிப்பது.

இவ்வாறாக ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் தனியாக காட்டுக்குள் சென்று திரும்புவது இயலாத ஒன்று. அதிலும் யானைகள் உள்ள காடுகளுக்குள் சென்று தகவல்கள் சேகரிப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சுமார் ஒரு கி.மீ. சென்றாலே போதும் திரும்பி வர வழிதெரியாமல் திக்கு முக்காடும் நிலைக்கு தள்ளப்படுவோம். இந்நிலையில் பலர் இன்று தங்கள் ஆய்வு கட்டுரைகளை முடிப்பதற்கும்.

ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெறுவதற்கும் முதுகெலும்பாக இருப்பவர்கள் காட்டின் வழிகாட்டிகள் எனப்படும் (ட்ரக்கர்கள்). பெரும்பாலும் பழங்குடி இனமக்கள் அல்லது உள்ளூர்வாசிகளே ட்ரக்கர்களாக உள்ளனர்.

யானை ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காட்டுக்குள் செல்பவர்கள் என யாரைக் கேட்டாலும் மிகவும் பரிச்சயமான நபர், வனஅதிகாரிகளால் பரிந்துரைக்கப்படுபவர்  நீலகிரி வடக்கு வனக்கோட்டத்துக்குட்பட்ட தெங்குமரஹடாவைச் சேர்ந்த ட்ரக்கர் கே.ராமசாமி . 

""முதுமலை, நீலகிரி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் வனச்சரகங்களுக்கு உட்பட்ட பல நூறு கி.மீ. வனப்பகுதி எனக்கு அத்துபடி, தெங்குமரஹடா, ஆனைக்கட்டி, மோயாறு, ஆசனூர், கெத்தேசால், தலைமலை, திம்பம், தாளவாடி உள்ளிட்ட வனப்பகுதிகள் எனக்கு நல்ல பரிச்சயம். காட்டில் எந்த இடத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்கும், எந்த நேரத்தில் விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும். எந்த இடத்தில் குறிப்பிட்ட விலங்கைப் பார்க்கலாம், அரியவகை தாவரங்கள் எந்த இடத்தில் வளரும் போன்ற தகவல்களை  அறிந்து வைத்திருப்பது ஆராய்ச்சி செய்ய வருபவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கிறது.

விலங்குகளின் கால்தடம், எச்சம், சிறிய சத்தங்கள், வாசனை இவற்றைக் கொண்டே எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை சரியாக என்னால் கணிக்க முடியும். பறவைகளின் ஒலியைக் கேட்டு காட்டில் நிலவும் அசாதாரண சூழலையும் அறியமுடியும்.

பைனாகுலர் மூலம் தேடிப் பிடித்து கிடைக்காத விலங்குகள், பறவைகள் இவரின் கூறிய பார்வைக்குத் தப்பமுடியாது. எளிதாகப் பார்த்து நமக்கும் காண்பிக்கும் ஆற்றல் படைத்தவர் ராமசாமி. மேலும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் குணாதிசயம் அவற்றின் தன்மைகள், பழக்கவழக்கங்களை விரல் நுனியில் வைத்துள்ளார்.

இவர் ஆரம்பக் கல்விக்கூட கற்காதவர் என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

யானைகள் பற்றிய ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற என்.சிவகணேசன், சி.அறிவழகன், பி.ராமகிருஷ்ணன் போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளேன். 1982}ம் ஆண்டு வனத்துறையில் ரூ.300 சம்பளத்துக்கு வாட்சராக வேலைக்கு சேர்ந்தேன். ஆறு மாதத்தில் வேலையை உதறிவிட்டு யானைகள் ஆராய்ச்சியாளரான சிவகணேசனுடன் சேர்ந்து அவரது ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் வழிகாட்டியபடி காடுகளைச்

சுற்றினேன்.

பின்னர் 1995 ஆம் ஆண்டு முதல் யானைகள் ஆராய்ச்சியாளர் அறிவழகன் மற்றும் ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு வழிகாட்டியாகப் பணியாற்றி வருகிறேன். கல்லூரி மாணவர்களைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று விலங்குகள், பறவைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். படிப்புவாசனை இல்லை என்றாலும் பறவைகளையும், விலங்குகளின் பெயர்களை ஆங்கிலத்தில் சொல்ல முடியும்'' என்று மலைக்க வைக்கிறார் ராமசாமி.

ராமசாமி வனத்துக்குள் செல்லும்போது கையில் எப்போதும் ஒரு வெட்டுக்கத்தி வைத்திருக்கிறார். அது விலங்குகளிடமிருந்து தப்புவதற்காக அல்ல, பெரும்பாலும் அவை மனிதர்களுக்குத் தீங்கிழைப்பதில்லை. சில மனிதர்களிடமிருந்து விலங்குகளைக் காப்பதற்காகத்தான் இந்த ஆயுதம் என்கிறார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.