நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாற்​றம் விரும்​பும் மாண​வர்​கள்!

அது சரியில்லை... இது சரியில்லை... இந்த நாட்டில் பசி, பட்டினி, எல்லாவற்றிலும் குறைபாடு, போதிய விழிப்புணர்வின்மை, கல்வியின்மை, ஊழல், சட்டம்-ஒழுங்கு சரியில்லை... அதனால் நான் இந்த நாட்டில் வேலை செய்ய மாட்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:51 pm

எம். ஆனந்த்

அது சரியில்லை... இது சரியில்லை... இந்த நாட்டில் பசி, பட்டினி, எல்லாவற்றிலும் குறைபாடு, போதிய விழிப்புணர்வின்மை, கல்வியின்மை, ஊழல், சட்டம்-ஒழுங்கு சரியில்லை... அதனால் நான் இந்த நாட்டில் வேலை செய்ய மாட்டேன். யு.எஸ்., அப்ராட், சாஃப்ட்வேர், பிபிஓ, கிரீன்கார்டு என்று அலைபாயும் இளைஞர்களுக்கு மத்தியில்  வேறுபட்டுள்ளனர் இரண்டு இளைஞர்கள் எம்.கணேஷும் எஸ்.மகேஷும்.

கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் முடித்து வளாகத் தேர்வில் பெரிய நிறுவனத்தில் பணிபுரிய தேர்வாகியும், எனக்கு வேறுசில சமுதாயப் பணிகளும் உள்ளன என்கிறார், கணேஷ். மற்றொருவரான மகேஷ், தற்போது கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் எம்.இ. தொடர்பியல் படித்துக்கொண்டே விடுமுறை நாட்களில் கணேஷ் மற்றும் நண்பர்கள் பட்டாளத்துடன் வயல்வரப்பு, புழுதிக்காடு நோக்கி படையெடுக்கின்றனர். நாளைய இந்தியாவின் சிறப்பான எதிர்காலம் கிராமப்புறங்களையே நம்பியுள்ளது. பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு உதவுவது, சமுதாய மேம்பாட்டுக்குப் பாடுபடுவது எங்கள் கடமை என்கிறார்கள் இவர்கள். இதற்காக "ஹெல்பிங் ஹார்ட்ஸ்' என்னும் அமைப்பைத் தொடங்கியிருக்கும்இந்த

வித்தியாசமான இளைஞர்களைச் சந்தித்தோம்.

எப்படி இந்த அமைப்பை உருவாக்கினீர்கள்?

கல்லூரி இறுதியாண்டில் மின்னணுவியல் துறையில் படித்த 15 நண்பர்கள் குழு ஒன்றாக இணைந்து "ஹெல்பிங் ஹார்ட்ஸ்' என்ற சேவை அமைப்பை உருவாக்கினோம். வார விடுமுறைகளில் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடை போன்றவற்றை வழங்கினோம்.

பின்னர் எங்கள் செலவுகளைக் குறைத்துக்கொண்டு அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு ஒரு கணினி வாங்கி அதை ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள மாணவர்களுக்கு வழங்கினோம். இன்றைய வளர்ந்துவரும் உலகில் எல்லாம் கணினி மையம் என்பதால், ஓய்வு கிடைக்கும் சமயங்களில் அந்த மாணவர்களுக்கு அடிப்படை கணினிப் பயிற்சியும் வழங்கினோம்.

இதற்கிடையே எங்கள் அமைப்பைப் பற்றி நண்பர்கள் மற்ற கல்லூரிகளில் பயிலும் அவர்களுடைய நண்பர்களிடம் கூற இப்படி செவிவழிச் செய்தியாக பரவி தற்போது கோவையிலுள்ள 15க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

நாங்கள் 6 வகைகளாக எங்கள் செயல்பாடுகளைப் பிரித்துக் கொள்கிறோம்:

1. கல்வி சார்ந்த செயல்பாடு: ஆதரவற்ற மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்குதல், பாடம் கற்பித்தல், அரசுப் பள்ளிகளில் மாலைநேர வகுப்பு நடத்துதல், ஏழ்மையிலுள்ள மாணவர்களைத் தேர்வு செய்து உயர்கல்விக்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளுதல். விளையாட்டுப் பிரிவில் கல்லூரியில் சேரும் வசதியற்ற மாணவர்களுக்குப் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் பெற்று

தருதல்.

2. சூழல் சார்ந்த செயல்பாடு: மக்கள் கூடும் இடங்களான அரசு மருத்துவமனை, பஸ் நிறுத்தம், பூங்காக்களில் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதைத் தவிர்த்தல், செய்தித்தாள்களை உபயோகித்து எளிமையான முறையில் காகிதப் பைகளைத் தயாரிப்பது குறித்து பள்ளி, கல்லூரிகளில் செயல்முறை விளக்கம், புவி வெப்பமயமாதல், மேற்கு தொடர்ச்சி மலையைக் காப்பது குறித்துப் பொது இடங்களில் தெருமுனைக் கூட்டம்.

3. மருத்துவச் செயல்பாடுகள்: ரத்ததானம், மருத்துவப் பரிசோதனை முகாம்கள், அரசு மருத்துவமனைகளில் ஏழ்மையான நோயாளிகளைச் சந்தித்து ஊட்டச்சத்து உணவு, பழங்கள் வழங்குதல், மாலை நேரங்களில் நோயாளிகளைப் பார்த்து ஆறுதல் கூறுவது.

4. ஆதரவற்றோர் இல்லச் செயல்பாடுகள்: ஆதரவற்ற இல்லங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள், கணினி வழங்குதல், மாலை நேர வகுப்புகள் எடுத்தல், விளையாட்டு, தற்காப்புக் கலை போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தல், முதியோர் இல்லங்களில் வசிக்கும் மூத்தோருடன் நேரம் செலவழித்தல், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.

5. விழிப்புணர்வுச் செயல்பாடுகள்: கல்வி முக்கியத்துவம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மக்கள்தொகை, புவிவெப்பமயமாதல், புற்றுநோய், மது மற்றும் புகைபிடித்தல், எய்ட்ஸ், பன்றிச் காய்ச்சல் போன்றவைத் தொடர்பாக விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் பேரணி, தெருமுனை விளக்கக் கூட்டம், நாடகம் நடத்துதல்.

6. சிறப்பு நிகழ்ச்சிகள்: மக்களையும் எங்கள் செயல்பாடுகளில் சேர ஊக்குவிக்கும் வகையில் ஆதரவற்றோருடன் பண்டிகைகள் கொண்டாட அழைப்புவிடுத்தல், கலை நிகழ்ச்சிகள் நடத்தி, பங்கேற்க வருபவர்களிடம் எங்கள் செயல்பாடுகள் குறித்து விளக்கி அவர்களையும் இணைத்துக் கொள்ளுதல்.

இதற்காக முதலில் எங்கள் பாக்கெட் மணியை ஒதுக்க ஆரம்பித்தோம். அதேபோல் எங்கள் குழுவில் உள்ள நண்பர்கள் தங்களது பிறந்தநாள் செலவைத் தந்துவிடுவது என்ற முடிவு செய்தோம். எங்கள் பெற்றோரிடம் எங்கள் செயல்பாடுகளைக் கூறி உதவி கேட்போம். திருமண நிகழ்வுகள் போன்ற விழாக்களில் உறவினர்கள், தெரிந்தவர்களைச் சந்திக்கும்போது அவர்களிடம் செயல்பாடுகள் பற்றி விளக்கி உதவி கோருகிறோம். சில வணிக நிறுவனங்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்று பல மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்கின்றன. 

இளைஞர்கள் பலர் சமூக அக்கறையுடன் எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பலாம். அவர்களுக்காக எங்கள் இணையதள முகவரி:

www.helpingheartservice.org

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.