எழுத்தும் எழுத்தாளர்களும்
1905-ம் ஆண்டு புவியீர்ப்பு சக்தி குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சிறப்பு ஆய்வுக் கட்டுரை அதே ஆண்டில் விஞ்ஞான பத்திரிகையொன்றில் வெளியாயிற்று. ஆனால் அவரது ஆய்வு 25 ஆண்டுகளுக்கு பின்னரே சரியானதென்று ஏ


1905-ம் ஆண்டு புவியீர்ப்பு சக்தி குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சிறப்பு ஆய்வுக் கட்டுரை அதே ஆண்டில் விஞ்ஞான பத்திரிகையொன்றில் வெளியாயிற்று. ஆனால் அவரது ஆய்வு 25 ஆண்டுகளுக்கு பின்னரே சரியானதென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாண்டுகள் கழித்து கணித உதவிப்பேராசிரியர் வேலைக்காக மனு போட்டிருந்தார். அப்போது மனுவுடன் ஆய்வுக் கட்டுரையொன்றையும் அனுப்பக் கோரியிருந்ததால் தன்னுடைய ஆய்வுகட்டுரையொன்றை அனுப்பினார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
அமெரிக்க கவிஞரும் விமர்சகருமான டி.எஸ்.எலியட்டிடம் (1888-1965) ராபர்ட் கிரோக்ஸ் என்ற பதிப்பாளர், ""பெரும்பாலான ஆசிரியர்களால் எழுத்தாளர்களாக இருக்க முடிவதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?'' என்று கேட்டாராம். ""ஆமாம். சில ஆசிரியர்களால் எழுத்தாளர்களாக முடிவதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்'' என்றவர் சில விநாடிகள் கழித்துச் சொன்னாராம்,""ஆனால் மிகச் சிறந்த எழுத்தாளர்களாக இருந்ததுண்டு.''
1882-ம் ஆண்டில் அமெரிக்கப் பல்கலை கழகத்தில் உரையாற்றச் சென்ற ஆஸ்கர் ஒயில்டிடம், நியூயார்க் கஸ்டம் அதிகாரிகள்,""உங்களிடம் டிக்ளர் செய்யக்கூடியவை ஏதாகிலும் உள்ளதா'' என்று கேட்டனர். ""என்னுடை அறிவைக்காட்டிலும் டிக்ளர் செய்ய வேறு ஏதுமில்லை'' என்றார். பல ஆண்டுகள் கழித்து அவரது தயவு தாட்சண்யமற்ற வாழ்க்கையைப் பிரதிபலிப்பதுபோல் தனிமையில் சிறையில் அடைபட்டிருந்தார். ""என்னுடைய அறிவை ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டேன். எந்த ஒரு சிறிய செய்கையும் கதாபாத்திரத்தை உருவாக்கலாம் அல்லது அழிக்கலாமென்பதை மறந்துவிட்டேன்'' என்றாராம்!
"லிட்டில் உமன்' என்ற கிளாசிக் நாவலை எழுதிய லூசியா மே அல் காட்டிற்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது. இவரது பதிப்பாளர் வற்புறுத்தியதால் இந்த நாவலை இவர் எழுதினாராம்.
கம்ப்யூட்டர் மற்றும் ஜெராக்ஸ் போன்ற வசதிகளற்ற காலத்தில் லியோ டால்ஸ்டாய் எழுதிய "வார் அண்ட் பீஸ்' (போரும் சமாதானமும்) என்ற நாவல் மிகப்பெரிய புத்தகமாக கருதப்பட்டது. அவர் எழுதிய மூலப்பிரதியை இவரது மனைவி ஏழு முறை கையால் பிரதி எடுத்து எழுதிக் கொடுத்தாராம்.
1889-ம் ஆண்டு ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய படைப்பொன்றை சான் பிரான்சிஸ்கோ "எக்ஸôமினர்' பத்திரிகை ஆசிரியர் வெளியிட்டபின்பு, இனி அவரது படைப்புகள் எதையும் ஏற்க முடியாது என்று கூறினாராம். காரணம்? ""உனக்கு ஆங்கில மொழியை எப்படி பயன்படுத்துவதென்பதே தெரியவில்லை. அமெச்சூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்க இது ஒன்றும் கின்டர் கார்டன் அல்ல'' என்றாராம். எட்டாண்டுகள் கழித்து சிறந்த இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றார் கிப்ளிங்.
முதன் முதலாக டைப்ரைட்டர் மூலமாக டைப் செய்யப்பட்ட புத்தகம் "தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டாம் சாயர்' 1875-ம் ஆண்டு மார்கெட்வெயின் இதை டைப் செய்ய ரெமிங்டன் டைப்ரைட்டரை பயன்படுத்தினாராம்.
ஜோனதன் ஸ்விப்ட் எழுதிய கிளாசிக் நாவலான "கலிவர்ஸ் டிராவல்ஸ்' ஒரு வகையில் சயின்ஸ் பிக்ஷனாக கருதப்பட்டது. சயின்ஸ் பிக்ஷன் என்று குறிப்படுவதற்கு முன்பே எழுதப்பட்டநாவல் அது. இந்தப் புத்தகத்தில் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி இரண்டு சந்திரன் இருப்பதாக எழுதியிருந்தார். வான சாஸ்திர வல்லுனர்கள் இதைப்பற்றி விவரிப்பதற்கு முன்பே அதன் அளவு சுற்றும் வேகம் போன்றவைகளை நூறாண்டுகளுக்கு முன்பே அவர் எழுதிவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...