சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

கம...கம..!

வாழைப்பழங்கள் ஆப்பிள்கள் போன்றவற்றை புரூட்சாலட்டிற்கு வெட்டி வைக்கும்போது அந்தத் துண்டுகளை எலுமிச்சம் பழச்சாற்றில் புரட்டி எடுத்து வைத்தால் நிறம் மாறாது. உருளை, வெங்காயச் சூப்கள் செய்யும்போது சிறிதளவு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:16 am

வாழைப்பழங்கள் ஆப்பிள்கள் போன்றவற்றை புரூட்சாலட்டிற்கு வெட்டி வைக்கும்போது அந்தத் துண்டுகளை எலுமிச்சம் பழச்சாற்றில் புரட்டி எடுத்து வைத்தால் நிறம் மாறாது.

உருளை, வெங்காயச் சூப்கள் செய்யும்போது சிறிதளவு சீஸ் சேர்த்தால் சூப் சுவையுடன் இருக்கும்.

வெந்தயக் குழம்பு கொதிக்கும்போது இரண்டு அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டு குழம்பை இறக்குங்கள்.  வாசம் கும்மென்றிருக்கும்.

தேங்காயைப் பல் பல்லாகக் கீறி தயிரில் போட்டு வைத்தால் இரண்டு நாள்கள் தயிர் கெட்டுப் போகாது.

கீரைகளை வாடிப் போகும் முன்பு உபயோகித்துவிட வேண்டும். காகிதத்தை நீரில் நனைத்து அதற்குள் கீரையைச் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.