நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செல்லமே... செல்லம்!

நம் குழந்தைகள் எதைக் கேட்டாலும், அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் வாங்கிக் கொடுக்கிறோம். காரணம், அவர்கள் நமது செல்லப் பிள்ளைகள் என்பதால்! குழந்தைகளுக்குப் பிடித்த பட்டியலில் இப்போது முக்கிய இடம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:15 am

எம். ஆனந்த்

நம் குழந்தைகள் எதைக் கேட்டாலும், அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் வாங்கிக் கொடுக்கிறோம். காரணம், அவர்கள் நமது செல்லப் பிள்ளைகள் என்பதால்!

குழந்தைகளுக்குப் பிடித்த பட்டியலில் இப்போது முக்கிய இடம் பிடித்திருப்பவை செல்லப் பிராணிகள். அதிலும் ஆப்ரிக்க பறவைகளை வீட்டில் வளர்ப்பதை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். நூறுகளில் ஆரம்பித்து லட்சங்கள் கொடுத்தும் இவை வாங்கப்படுகின்றன.

சமீபத்தில் கோவையில் நடந்த செல்லப்பிராணிகள் கண்காட்சி மற்றும் விற்பனையில் ஓர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த பறவைகளின் மதிப்பு மட்டும் சுமார் 50 லட்சம் ரூபாய். பறவைகள் பண்ணையாளர் எஃப். நவீன் தம் பண்ணையில் வளரும் பறவைகள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ஃபிஞ்சஸ் பறவை: ஒரு சில நூறு ரூபாய்களில் ஆரம்பிக்கிறது ஆஸ்திரேலிய ஃபிஞ்சஸ் பறவைகள் விலை. அளவில் சிட்டுக் குருவிகளை விடச் சிறியதாக இருக்கிறது. உடல் முழுவதும் பால் போன்ற வெள்ளை நிறம். மூக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் அது ஆண் பறவை. ஆரஞ்சு நிறமாக இருந்தால் பெண். உடலில் கொஞ்சம் கருப்பு கலந்து கண்களுக்கு அருகில் பிரவுன் நிறம் இருக்குமானால் அது "பைடு'. கண்களுக்குக் கீழ் கண்ணீர் சொட்டு போல் கருப்பு நிறத்தில் சிறிய கோடு இருந்தால் அது "கிரைடு'. கொஞ்சம் அழுக்கான வெள்ளை போல் காட்சியளித்தால் அது "ஃபான்டு', காது அருகில் வரி குதிரை போல் இருந்தால் அது "ஜீப்ரா' என உட்பிரிவுகள் உள்ளன. இவை ஜோடி ரூபாய் 150-க்கு விற்கப்படுகின்றன. வெள்ளை நிறத்துக்குப் பதிலாக உடலில் சிவப்பு, மஞ்சள், ஊதா, நீலம், பச்சை போன்ற நிறங்கள் இருந்தால் அவை கோல்டன் ஃபிஞ்சஸ் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூபாய் 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. வால் நீளமாக இருக்கும் பட்சத்தில் அவை லாங்க் டெயில் ஃபிஞ்சஸ் என அழைக்கப்படுகின்றன. விலை ரூபாய் 1200. ஃபிஞ்சஸ் இனம் வருடம் முழுவதும் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை. 4 முதல் 5 முட்டைகள் இடும். 18 நாட்கள் அடைகாக்கும். இவை 4 முதல் 5 ஆண்டுகள் உயிர் வாழ்பவை.

ஜாவா: அமெரிக்க சிட்டுக் குருவி இனத்தைச் சேர்ந்தவை ஜாவா குருவிகள். ஃபிஞ்சஸ் பறவைகளை விட அளவில் கொஞ்சம் பெரிதாக காட்சியளிக்கின்றன. கிரே ஜாவா, வைட், ஃபான்ட், சில்வர் என உட்பிரிவுகளை உடையது. 6 மாதத்துக்கு ஒரு முறை முட்டையிடும். 4 முதல் 5 முட்டைகள் வரை இடும். இந்த வகை ஜோடியின் விலை ரூபாய் 1200.

லூட்டினோ: பேரகீட் குடும்பத்தைச் சேர்ந்த இவை ஆப்ரிக்கன் லவ் பேர்ட்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆப்ரிக்க காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு பண்ணைகளில் வைத்து வளர்த்து இனப்பெருக்கம் செய்யப்பட்டவை. சுமார் 10செ.மீ நீளமும், 3 செ.மீ அகலமும் உடையவை. உடல் முழுவதும் மஞ்சள் நிறமும் தலைக்கு மேல் தொப்பி வைத்ததைப் போல் சிவப்பு நிறமும் காணப்படும். தலை மற்றும் மார்பு பகுதி ரோஸ் நிறத்தில் இருக்கும் பட்சத்தில் அவை பீச் இனம் என அழைக்கப்படுகின்றன. நிற மாறுபாட்டுக்கு ஏற்றாற் போல் இவை ஆலிவ் கிரீன், ஃபிஷர், எல்லோ ஃபிஷர், பீச் ஃபேஸ், கிரீம் பைடு, மோவ் மாஸ்க், புளூ மாஸ்க், புளூ பூச், லூட்டினோ ஃபிஷர் என அழைக்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்தில் முட்டையிடும். 4 முதல் 5 முட்டைகள் வரையிடும். 7 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இந்த வகை பறவைகளின் ஜோடி விலை ரூபாய் அதிகபட்சம் 1200 வரை.

லாரகீட்: இவை கிளிகளைப் போலவே பல வண்ணங்கள் கலந்திருக்கும் 30 வருடங்களுக்கு மேல் வாழக்கூடியவை. ஆண்டுக்கு ஒரு முறை டிசம்பர் மாதத்தில் 3 முதல் 4 முட்டைகள் வரை இடும். மலரில் உள்ள மகரந்தம் மற்றும் தேனை மட்டுமே உண்டு வாழ்பவை. அவற்றை நம்மால் கொடுக்க முடியாது என்பதால் பண்ணைகளில் இவற்றின் உணவு பழக்கம் மாற்றப்பட்டது. குழந்தைகளைப் போல் ஃபேரக்ஸ் கூழ், வேகவைத்த ஆப்பிள் பழத்தில் தேன் கலந்த உணவை சாப்பிட பழக்கப்படுத்தப்பட்டன. இவற்றின் விலை ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம்.

காக்கட்டூஸ்: இவை வெள்ளை நிறத்தில் சுமார் ஒரு அடி உயரமும் வரை வளர்பவை. கிளியைப் போன்ற பெரிய கறுப்பு அலகு உடையவை. தலைக்கு மேல் கொண்டை இருக்கும் அம்பர்லா, கோஃபிங், சல்ஃபர் கிரசன்ட் எனப் பல உட்பிரிவுகள் உள்ளன. விலை ஒன்றுக்கு ரூபாய் 5ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரை உள்ளது. டிசம்பர் மாதத்தில் முட்டையிடும் 2 முதல் 3 முட்டைகள் வரை இடும். 28 நாட்கள் அடைகாக்கும். 25 ஆண்டுகள் உயிர் வாழும். பழக்கப்படுத்தினால் பேசும் திறன் உடையவை. பழக்கப்படுத்திய பறவைகளுக்கு இருமடங்கு விலை.

காங்கோ கிரே பேரட்: உடல் முழுவதும் சாம்பல் நிறத்தில் இருக்கும். வாலின் அடிப்பகுதியில் சிவப்பு நிறம் காணப்படும். 120 ஆண்டுகள் வாழக்கூடியவை. 30 வயதுக்கு மேல்தான் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஆண்டுக்கு ஒருமுறை டிசம்பர் மாதத்தில் 2 முதல் 3 முட்டைகள் இடும். விலை ஒன்றுக்கு ரூ.25 முதல் 30 ஆயிரம் வரை.

மக்காவ்: இந்த வகைப் பறவைகளை நீங்கள் சர்க்கஸில் பார்த்திருக்கக் கூடும். பல சாகசங்களைச் செய்து அனைவரையும் கவரக் கூடியவை. 90 முதல் 100 ஆண்டுகள் உயிருடன் வாழ்பவை. அமேசான் காடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற இடங்களில் பண்ணைகளில் வைத்து இனப்பெருக்கம் செய்யப்படுபவை. புளூ அண்டு எல்லோ விங்டு மங்க்காவ், ரெட்விங்டு மக்காவ், ஸ்கார்லட் மக்காவ் என நிறங்களுக்கு ஏற்ப 3 வகைகள் உள்ளன. இவற்றின் விலை ஒன்றுக்கு ரூபாய் 1.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை விற்கப்படுகின்றன. இவை 2 முதல் 3 முட்டைகள் வரை இடுகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே முட்டையிடும். 30 வயதுக்கு மேல்தான் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். சுமார் 2 அடி முதல் 4 அடி வரை வளரும். எக்சாட்டிக் பறவைகள் என்பதால் இப்பறவைகளை வீட்டில் வளர்க்கலாம். இப்படியாக இன்னும் 30க்கும் மேற்பட்ட பறûவைகளின் பட்டியல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.